பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பகுதி 1 ஒன்றியமும் அதன் ஆட்சிநிலவரையும் 1. ஒன்றியத்தின் பெயரும் ஆட்சி நிலவரையும் : (1) இந்தியா எனும் பாரதம், மாநிலங்களைக் கொண்டதோர் ஒன்றியமாக இருக்கும். 2 மாநிலங்களும் அவற்றின் ஆட்சிநிலவரைகளும் முதலாம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறு இருக்கும். (3) இந்தியாவின் ஆட்சிநிலவரை(அ) மாநிலங்களின் ஆட்சிநிலவரைகளையும், (ஆ) முதலாம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளையும், (இ) அடையப்பெறும் பிற ஆட்சிநிலவரைகளையும் உள்ளடக்குவது ஆகும். 2. புதிய மாநிலங்களை ஏற்றிணைத்தல் அல்லது நிறுவுதல் : நாடாளுமன்றம், தான் தக்கதெனக் கருதுகிற வரையரைகள் மற்றும் வரைக்கட்டுகளுக்கு இணங்க, சட்டத்தினால், புதிய மாநிலங்களை ஒன்றியத்துள் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிறுவலாம். '12அ. . . . .] 3. புதிய மாநிலங்களை உருவாக்குதலும் நிலவுறும் மாநிலங்களின் பரப்பிடங்களை, எல்லைகளை அல்லது பெயர்களை மாற்றம் செய்தலும் : நாடாளுமன்றம், சட்டத்தினால்அ) எந்தவொரு மாநிலத்திலிருந்தும் ஆட்சிநிலவரையைப் பிரித்தோ இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்களை அல்லது மாநிலங்களின் பகுதிகளை ஒன்றிணைத்தோ மாநிலம் ஒன்றன் பகுதியுடன் ஆட்சிநிலவரை எதனையும் ஒன்றிணைத்தோ புதிய மாநிலம் ஒன்றை உருவாக்கலாம்; (ஆ) எந்தவொரு மாநிலத்தின் பரப்பிடத்தையும் விரிவாக்கலாம்; இ) எந்தவொரு மாநிலத்தின் பரப்பிடத்தையும் குறைக்கலாம்; ஈ) எந்தவொரு மாநிலத்தின் எல்லைகளையும் மாற்றலாம்; (உ) எந்தவொரு மாநிலத்தின் பெயரையும் மாற்றலாம் : வரம்புரையாக: இதன்பொருட்டான சட்டமுன்வடிவு எதனையும், குடியரசுத்தலைவரின் பரிந்துரை மீதல்லாமலும், மேலும், அச்சட்டமுன்வடிவில் அடங்கிய செயற்குறிப்பு மாநிலங்களில் ஒன்றன் - பரப்பிடத்தையோ எல்லைகளையோ பெயரையோ பாதிக்குமிடத்து, அச்சட்டமுன்வடிவு, குடியரசுத் தலைவரால் அந்த மாநிலச் சட்டமன்றத்திற்கு, அச்சட்டமுன்வடிவு மீதான அதன் கருத்தினை, அவர் குறித்துரைக்கும் கால அளவிற்குள்ளாகவோ அவர் அனுமதிக்கும் கூடுதலான காலஅளவிற்குள்ளாகவோ தெரிவிப்பதற்கெனக் குறித்தனுப்பப்பட்டிருந்து, அவ்வாறு அதில் குறித்துரைக்கப்பட்ட அல்லது கூடுதலாக அனுமதிக்கப்பட்ட கால அளவு கழிவுற்றிருந்தால் அன்றியும், நாடாளுமன்ற ஈரவைகள் எதிலும் அறிமுகப்படுத்துதல் ஆகாது. விளக்கம் I.-- இந்த உறுப்பின் (அ) முதல் (உ) வரையுள்ள கூறுகளில், “மாநிலம்" என்பது, ஒன்றியத்து ஆட்சிநிலவரையையும் உள்ளடக்கும்; ஆனால், வரம்புரையில் “மாநிலம்" என்பது, ஒன்றியத்து ஆட்சிநிலவரையை உள்ளடக்குவதில்லை. ! 1975 ஆம் ஆண்டு அரசமைப்பு முப்பத்து ஆறாம் திருத்தம்) சட்டத்தின் 5ஆம் பிரிவினால் நீக்கறவு செய்யப்பட்டது. (26-4-1975 செல்திறம் பெறுமாறு) 31+ 1