பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

19. குடிமை உரிமைகள் தொடர்ந்திருத்தல் : இந்தப் பகுதியின் மேலேகண்ட வகையங்களில் எதன்படியும் இந்தியாவின் குடிமகனாக இருக்கின்ற அல்லது இருப்பதாகக் கொள்ளப்பெறுகின்ற ஒவ்வொருவரும், நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்தின் வகையங்களுக்கு உட்பட்டு, தொடர்ந்து அத்தகைய குடிமகனாக இருந்துவருவார். 11. நாடாளுமன்றம் சட்டத்தினால் குடிமை உரிமையை ஒழுங்குறுத்துதல் : இந்தப் பகுதியின் மேலேகண்ட வகையங்களிலுள்ள எதுவும், குடிமை பெறுதல், குடிமை ஆறுதல் பொறுத்தும் குடிமை தொடர்பான பிற அனைத்துப் பொருட்பாடுகள் பொறுத்தும் வகையம் எதுவும் செய்வதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரத்தைத் திறக்குறைவு செய்வதில்லை. பாறுத்தும் பகுதி III அடிப்படை உரிமைகள் பொதுவியல் 12. பொருள்வரையறை : இந்தப் பகுதியில், தறுவாயின் தேவை வேறானாலன்றி, “அரசு” என்பது, இந்தியாவின் அரசாங்கத்தையும் நாடாளுமன்றத்தையும், மாநிலங்கள் ஒவ்வொன்றின் அரசாங்கத்தையும் சட்டமன்றத்தையும், இந்திய ஆட்சிநிலவரைக்குள்ளோ இந்திய அரசாங்கத்தின் கட்டாள்கையிலோ இருக்கும் உள்ளாட்சி அல்லது பிறவகை அதிகார அமைப்புகள் அனைத்தையும் உள்ளடக்கும். 13. அடிப்படை உரிமைகளுக்கு முரணான அல்லது அவற்றைத் திறக்குறைவு செய்யும் சட்டங்கள் : (1) இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு இந்திய ஆட்சிநிலவரையில் செல்லாற்றலிலுள்ள சட்டங்கள் அனைத்தும், இந்தப் பகுதியின் வகையங்களுக்கு முரணாக இருக்கும் அளவிற்கு இல்லாநிலையன ஆகும். (2) இந்தப் பகுதியில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்கும் அல்லது ஒடுக்கும் சட்டம் எதனையும் அரசு இயற்றுதல் ஆகாது; மேலும், இந்தக் கூறினை மீறும் வகையில் இயற்றப்படும் சட்டம் எதுவும், அவ்வாறு மீறும் அளவிற்கு இல்லாநிலையது ஆகும். (3) இந்த உறுப்பில், தறுவாயின் தேவை வேறானலன்றி --- (அ) “சட்டம்” என்பது, இந்திய ஆட்சிநிலவரையில் சட்டச் செல்லாற்றல் கொண்ட அவசரச் சட்டம், ஆணை, துணை விதி, விதி, ஒழுங்குறுத்தும்விதி, அறிவிக்கை, வழக்கம், வழக்காறு இவற்றை உள்ளடக்கும்; ஆ) “செல்லாற்றலிலுள்ள சட்டங்கள்” என்பது, இந்த அரசமைப்பின் தொடக்கநிலைக்கு முன்பு, இந்திய ஆட்சிநிலவரை:பில் இருந்த ஒரு சட்டமன்றத்தினாலோ தகுதிறமுள்ள பிறவகை அதிகார அமைப்பினாலோ நிறைவேற்றப்பட்டு அல்லது இயற்றப்பட்டு, முன்னரே நீக்கறவு செய்யப்படாத சட்டங்களை, அத்தகைய சட்டம் எதுவும் அல்லது அதன் பகுதி எதுவும் அப்போது முற்றிலுமாகவோ குறிப்பிட்ட பரப்பிடங்களிலோ செயற்பாட்டில் இல்லாதிருப்பினும், உள்ளடக்கும். (4) இந்த உறுப்பிலுள்ள எதுவும், இந்த அரசமைப்பின் 368ஆம் உறுப்பின்படி செய்யப்படும் - திருத்தம் எதற்கும் பொருந்துறுவதில்லை . 31+-8