பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமன்மைக்கான உரிமை 14. சட்டத்தின் முன்னர்ச் சமன்மை : அரசு, இந்திய ஆட்சிநிலவரைக்குள் சட்டத்தின் முன்னர்ச் சமன்மையையும் சட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பில் சமன்மையையும் எவர் ஒருவருக்கும் மறுத்தல் ஆகாது. 15. சமயம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் காரணமாக வேற்றுமை காட்டுதலுக்குத் தடை : (1) அரசு, குடிமகன் எவர்மட்டும், சமயம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் இவற்றை மட்டுமே அல்லது இவற்றுள் ஏதொன்றையும் மட்டுமே காரணமாகக் கொண்டு வேற்றுமை காட்டுதல் ஆகாது. (2) குடிமகன் எவரையும் - (அ) கடைகள், பொது உண்டிச்சாலைகள், உணவு விடுதிகள், பொதுக் கேளிக்கையிடங்கள் ஆகியவற்றிற்குச் சென்று வருவதையோ, ஆ) அரசு நிதியங்களை முழுவதுமாகவோ பகுதியாகவோ கொண்டு பேணப்படும் அல்லது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உரித்தாக்கப்படும் கிணறுகள், குளங்கள், நீராடுதுறைகள், சாலைகள், பொதுமக்கள் சாருமிடங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதையோ பொறுத்து, சமயம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் இவற்றை மட்டுமே அல்லது இவற்றுள் ஏதொன்றையும் மட்டுமே காரணமாகக் கொண்டு, தகவுக்கேடு, கடப்பாடு, வரைத்தடை அல்லது நிபந்தனை எதற்கும் உட்படுத்துதல் ஆகாது. (3) இந்த உறுப்பிலுள்ள எதுவும், மகளிர்க்காகவும் சிறார்க்காகவும் தனி ஏற்பாடு எதனையும் அரசு செய்வதற்குத் தடையூறு ஆவதில்லை . (4) இந்த உறுப்பிலோ 29ஆம் உறுப்பின் (2) ஆம் கூறிலோ உள்ள எதுவும், குடிமக்களில் சமுதாயநிலையிலும் கல்விநிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மேம்பாட்டிற்காகவோ பட்டியலில் கண்ட சாதியினர், பட்டியலில் கண்ட பழங்குடியினர் ஆகியோருக்காகவோ தனி ஏற்பாடு எதனையும் அரசு செய்வதற்குத் தடையூறு ஆவதில்லை. '{[5) இந்த உறுப்பிலோ அல்லது 19 ஆம் உறுப்பின் (1) ஆம் கூறின் (எ) உட்கூறிலோ உள்ள எதுவும், குடிமக்களில் சமுதாய நிலையிலும் கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எவரின் மேம்பாட்டிற்காகவோ அல்லது பட்டியலில் கண்ட சாதியினர் அல்லது பட்டியலில் கண்ட பழங்குடியினருக்காகவோ, 30 ஆம் உறுப்பின் (1) ஆம் கூறில் சுட்டப்பட்ட சிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் அல்லாத பிற அரசு உதவிபெறும் அல்லது உதவிபெறாத தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளடங்கலான கல்வி நிறுவனங்களில், அவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கு, தனி ஏற்பாடு எதுவும் எந்த அளவுக்குத் தொடர்புடையதாயிருக்கிறதோ அந்த அளவுக்கு, அத்தகைய தனி ஏற்பாடு எதனையும், அரசு சட்டத்தின் வாயிலாகச் செய்வதற்குத் தடையூறு ஆவதில்லை.] 16. பொது வேலையமர்த்தங்கள் தொடர்பாகச் சமன்மையான வாய்ப்புநலம் : (1) குடிமக்கள் அனைவருக்கும், அரசின்கீழுள்ள வேலையமர்த்தம் அல்லது பதவியமர்த்தம் தொடர்பாகச் சமன்மையான வாய்ப்புநலம் இருத்தல் வேண்டும். 1 2005ஆம் ஆண்டு அரசமைப்பு (தொண்ணூற்று மூன்றாம் திருத்தம்) சட்டத்தினால் புகுத்தப்பட்டது. (20-1-2006 முதல் செல்திறன் பெறுமாறு 114