பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(6) மேற்சொன்ன கூறின் (எ) உட்கூறிலுள்ள எதுவும், அந்த உட்கூறினால் வழங்கப்படும் உரிமையினைத் துய்த்தல் பொறுத்து, பொது மக்களின் நலங்கருதி தகுமான வரைத்தடைகளை விதிக்கின்ற அளவிற்கு, நிலவுறும் சட்டம் ஒன்றன் செயற்பாட்டினைப் பாதிப்பதுமில்லை; அத்தகைய சட்டம் எதனையும் அரசு இயற்றுவதற்குத் தடையூறு ஆவதுமில்லை ; மேலும், குறிப்பாக, மேற்சொன்ன உட்கூறிலுள்ள எதுவும் OR விழைதொழில் எதனையும் புரிந்துவருவதற்கு அல்லது வாழ்தொழில், வணிகத்தொழில் அல்லது ஆகுதொழில் எதனையும் நடத்தி வருவதற்குத் தேவையான விழைதொழில் சார்ந்த அல்லது தொழில்நுட்பம் சார்ந்த தகுதிப்பாடுகள், அல்லது வணிகத்தொழில், ஆகுதொழில், விசைத்தொழில் அல்லது பணியம் எதுவும், குடிமக்களை முழுவதுமாகவோ பகுதியாகவோ விலக்கியாயினும் அல்லது பிறவாறாயினும், அரசினாலோ அரசுக்குச் சொந்தமான அல்லது அதன் கட்டாள்கையிலுள்ள ஒரு கூட்டு குழுமத்தாலோ நடத்தப்பட்டு வருதல். இவை தொடர்புடைய அளவிற்கு, நிலவுறும் சட்டம் ஒன்றன் செயற்பாட்டினைப் பாதிப்பதுமில்லை; அது பொறுத்த சட்டம் எதனையும் அரசு இயற்றுவதற்குத் தடையூறு ஆவதுமில்லை . 20. குற்றச்செயல்களுக்கான குற்றத்தீர்ப்பு பொறுத்த பாதுகாப்பு : (1) ஒருவர் மீது குற்றமெனச் சார்த்தப்பட்ட செயல் எதுவும், அது இழைக்கப்பட்ட காலத்தில் செல்லாற்றலிலிருந்த சட்டம் ஒன்றை மீறியதாகயிருந்தாலன்றி, அவரைக் குற்றத்தீர்ப்புக்கு உள்ளாக்குதல் ஆகாது; அத்துடன், அக்குற்றச்செயல் இழைக்கப்பட்ட காலத்தில் செல்லாற்றலிலிருந்த சட்டத்தின்படி விதித்திருக்கக்கூடிய தண்டனையைவிட அதிகமான தண்டனைக்கு அவரை உட்படுத்தலும் ஆகாது. (2) ஒருவர், ஒரே குற்றச்செயலுக்காக ஒரு முறைக்கு மேல் வழக்குத் தொடரப்படுதலும் தண்டிக்கப்படுதலும் ஆகாது. (3) குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரைத் தமக்கெதிர் சான்றளிப்பவராக இருக்குமாறு கட்டாயப்படுத்துதல் ஆகாது. 21. உயிருக்கும் உடல்சார் உரிமைக்கும் பாதுகாப்பு : ஒருவரது உயிரோ உடல்சார் உரிமையோ, சட்டம் விதித்தமைத்துள்ள நெறிமுறைப்படி அன்றி, பறிக்கப்படுதல் ஆகாது. '[21அ. கல்வி கற்பதற்கான உரிமை: ஆறு முதல் பதினான்கு வயதுள்ள சிறார்கள் அனைவருக்கும் அரசு, சட்டத்தின் வாயிலாகத் தீர்மானிக்கும் முறையில் இலவசக் கட்டாயக் கல்வி அளிக்க அரசு ஏற்பாடு செய்தல் வேண்டும்.) 22. குறித்தசில நேர்வுகளில் கைது செய்தல், காவலில் வைத்தல் இவற்றிலிருந்து பாதுகாப்பு : (0 கைது செய்யப்பட்டுள்ள எவரும், அவ்வாறு கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் கூடியவிரைவில் அவருக்குத் தெரிவிக்கப் பெறாமல் காவலில் தடுத்துவைக்கப்படுதல் ஆகாது; மேலும், அவருக்கு, தாம் விரும்பிய வழக்குரைஞரைக் கலந்தாய்வு செய்வதற்கும் அவர் வழியாக எதிர்வாதம் செய்வதற்குமான உரிமை மறுக்கப்படுதலும் ஆகாது. (2) கைது செய்யப்பட்டுக் காவலில் தடுத்து வைக்கப்பட்ட ஒவ்வொருவரும், அவர் கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து மிகவும் அருகிலுள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தைச் சென்றடைவதற்குத் தேவையான காலம் நீங்கலாக, அவ்வாறு கைது செய்யப்பட்டதிலிருந்து இருபத்து நான்கு மணி நேரக் கால அளவிற்குள் அக்குற்றவியல் நடுவரிடம் முன்னிலைப்படுத்தப்படுதல் வேண்டும், மேலும், அவர், ஒரு குற்றவியல் நடுவரின் ஆணையின்றி மேற்சொன்ன காலஅளவினைக் கடந்து காவலில் வைக்கப்படுதலும் ஆகாது. 1 2002 ஆம் ஆண்டு அரசமைப்பு (எண்பத்து ஆறாம் திருத்தச் சட்டத்தினால் புகுத்தப்பட்டது. 31-4-9