பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

30. கல்வி நிறுவனங்களை நிறுவவும் நிருவகிக்கவும் சிறுபான்மையினருக்குள்ள உரிமை : (1) சமயம் அல்லது மொழி எதன் அடிப்படையிலும் சிறுபான்மையினராக உள்ள அனைவரும் தங்கள் விருப்பப்படி கல்வி நிறுவனங்களை நிறுவவும் நிருவகிக்கவும் உரிமை உடையவர் ஆவர். (14). (1) ஆம் கூறில் சுட்டப்பட்டுள்ள சிறுபான்மையினரால் நிறுவப்பட்டு திருவகிக்கப்பெற்றுவரும் ஒரு கல்வி நிறுவனத்தின் சொத்து எதனையும் கட்டாயமாகக் கெயகப்படுத்துவதற்கு வகை செய்கிற சட்டம் ஒன்றை இயற்றுகையில், அச்சொத்தினைக் கையகப்படுத்துவதற்காக அச்சட்டத்தினால் நிருணயிக்கப்படும் அல்லது அதன்கீழ் தீர்மானிக்கப்படும் தொகையானது, அந்தக் கூறின்படி உத்தரவாதமளிக்கப்பட்ட உரிமையினை அருக்கம் செய்வதாகவோ நீக்கறவு செய்வதாகவோ இல்லாதவாறு அரசு உறுதியுறப் பாத்துக்கொள்ள வேண்டும். (2) கல்வி நிறுவனங்களுக்கு உதவி வழங்குகையில், கல்வி நிறுவனம் ஒன்று, சமயம் அல்லது மொழி எதன் அடிப்படையிலும் சிறுபான்மையினராக உள்ளவர்களின் மேலாண்மையில் இருக்கிறதென்னும் காரணத்தைக்கொண்டு அதற்கு எதிராக அரசு வேற்றுமைகாட்டுதல் ஆகாது, '[31. . . +1 | குறித்தசில சட்டங்களுக்குக் காப்புரை 31அ. உரிமைநிலச்சொத்துக்கள் முதலியனவற்றைக் கையகப்படுத்துவதற்கு வகைசெய்யும் சட்டங்களுக்குக் காப்புரை : (1). 13ஆம் உறுப்பில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்-- (அ) உரிமைநிலச்சொத்து எதனையும் அல்லது அதிலுள்ள உரிமைகள் எவற்றையும் அரசு கையகப்படுத்துவதற்கு அல்லது அத்தகைய உரிமைகள் எவற்றையும் ஒழித்துவிடுவதற்கு அல்லது மாற்றமைவு செய்வதற்கு, அல்லது (ஆ) பொதுநலங்கருதியோ சொத்திற்கு முறையான நிருவாகம் அமையச் செய்யவோ வரம்புக்குட்பட்ட ஒரு காலஅளவிற்கு, சொத்து ஒன்றன் நிருவாகத்தை அரசு மேற்கொள்ளுவதற்கு, அல்லது (இ) இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட கூட்டுருமங்களை பொது நலங்கருதியோ அக்கூட்டுருமங்களில் ஏதொன்றின் முறையான மேலாண்மை அமையச் செய்யவோ ஒருங்கிணைப்பதற்கு, அல்லது (ஈ) கூட்டுருமங்களின் மேலாண்மை முகவர்கள், செயலாளர்கள் மற்றும் பொருளாளர்கள், மேலாண்மை இயக்குநர்கள், இயக்குநர்கள் அல்லது மேலாளர்களின் உரிமைகள் எவற்றையும் அல்லது அவற்றில் பங்குடையவர்களின் வாக்குரிமைகள் எவற்றையும் ஒழித்துவிடுவதற்கு அல்லது மாற்றமைவு செய்வதற்கு, அல்லது (உ) கனிமம் அல்லது கனிம எண்ணெய் எதனையும் தேடுவதற்கான அல்லது தோண்டியெடுப்பதற்கான உடன்பாட்டின், குத்தகையின் அல்லது உரிமத்தின் காரணமாகச் சேர்ந்தடையும் உரிமைகள் எவற்றையும் ஒழித்துவிடுவதற்கு அல்லது மாற்றமைவு செய்வதற்கு அல்லது அத்தகைய உடன்பாடு, குத்தகை அல்லது உரிமம் எதனையும் முதிர்வுக்காலத்திற்கு முன்னரே முடிவுறுத்துவதற்கு அல்லது அறவுசெய்வதற்கு

  • 1978 ஆம் ஆண்டு அரசமைப்பு (நாற்பத்து நான்காம் திருத்தம்) சட்டத்தின் 6ஆம் பிரிவினால் (20-6-1979

முதல் செல்திறம் பெறுமாறு) நீக்கறவு செய்யப்பட்டது. 114-10