பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

13 வகைசெய்யும் சட்டம் எதுவும், 14ஆம் உறுப்பினால் அல்லது 19ஆம் உறுப்பினால் வழங்கப்படும் உரிமைகளில் எதனுடனும் முரண்படுகிறது அல்லது அத்தகைய உரிமைகளில் எதனையும் பறிக்கிறது அல்லது ஒடுக்குகிறது என்னும் காரணத்தால் இல்லாநிலையதாகக் கொள்ளப்படுதல் ஆகாது வரம்புரையாக : அத்தகைய சட்டம் ஒரு மாநிலச் சட்டமன்றத்தினால் இயற்றப்பட்ட ஒரு சட்டமாக இருக்குமிடத்து, அது குடியரசுத்தலைவரின் ஒர்வுக்காக ஒதுக்கிவைக்கப்பட்டிருந்து, அவருடைய ஏற்பிசைவையும் பெற்றிருந்தாலன்றி, இந்த உறுப்பின் வகையங்கள் அச்சட்டத்திற்குப் பொருந்துறுவதில்லை : மேலும் வரம்புரையாக: சட்டம் எதுவும் உரிமை நிலச்சொத்து ஒன்றை அரசு கையகப்படுத்துவதற்கு வகைசெய்யுமிடத்து, அந்தச் சொத்தில் அடங்கியுள்ள நிலம் எதுவும் ஒருவரின் நேரடிச் சாகுபடியில் இருக்குமாயின், அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள சட்டம் ஒன்றன்படி அவருக்குப் பொருந்துறும் உச்சவரம்புக்குள் வருகிற நிலத்தின் பகுதி எதனையும் அல்லது அதன் மேலமைந்திருக்கும் அல்லது அதனைச் சேர்ந்திருக்கும் கட்டடம் அல்லது கட்டுமானம் எதனையும் அரசு கையகப்படுத்துகையில், அத்தகைய நிலத்தை, கட்டடத்தை அல்லது கட்டுமானத்தைக் கையகப்படுத்துவதன் தொடர்பான அச்சட்டம் அதன் நிலவ மதிப்புக்குக் குறைவுபடாததொரு விழுக்காட்டில் சரியீடு கொடுப்பதற்கு வகை செய்தாலன்றி. அவ்வாறு கையகப்படுத்தல் சட்டமுறையானது ஆகாது. 2) இந்த உறுப்பில்(அ) வட்டாரப் பகுதி எதன் தொடர்பாகவும் “உரிமைநிலச்சொத்து என்னும் சொற்றொடர், அந்தப் பகுதியில் செல்லாற்றலிலுள்ள நிலப்பிடிமானமுறை பற்றிய நிலவுறும் சட்டத்தில் அந்தச் சொற்றொடர் அல்லது வட்டார வழக்கில் அதற்கு நிகராகவுள்ள சொற்றொடர் கொண்டுள்ள அதே பொருளை உடையது ஆகும்; மேலும், அத்தொடர்( ஜாகீர், இனாம் அல்லது முவாஃபி அல்லது அது போன்ற பிற மானியம் எதனையும், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களிலுள்ள ஜன்மம் உரிமை எதனையும், (1) ரயத்துவாரி முறை ஏற்பாட்டிற்கு உட்பட்டுள்ள நிலம் எதனையும், (it) தரிசு நிலம், காட்டுநிலம், மேய்ச்ச ல் நிலம் அல்லது நிலம் பயிரிடுபவர்கள், வேளாண் தொழிலாளர்கள், ஊர்க் கைவினைஞர்கள் ஆகியோருடைய கையுடைமையிலுள்ள கட்டட மற்றும் பிற கட்டுமான மனையிடங்கள் உள்ளடங்கலாக, வேளாண்மை பொருட்டோ அதன் துணை நோக்கங்களுக்காகவோ வைத்துவரப்பட்டுள்ள அல்லது குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலம் எதனையும் உள்ளடக்கும். (ஆ) உரிமை நிலச்சொத்து ஒன்றன் தொடர்பாக “உரிமைகள்” என்னும் சொல், ஓர் உரிமையாளர், சார் உரிமையாளர், கீழ் உரிமையாளர், நிலப்பிடிமானக்காரர், குடியானவர், கீழ்க் குடியானவர் அல்லது பிற இடையுரிமையாளர் இவர்களிடம் உற்றமையும் உரிமைகள் எவற்றையும் மற்றும் நிலவருவாய் பொறுத்த உரிமைகள் அல்லது தனிச்சலுகைகள் எவற்றையும் உள்ளடக்குவதாகும். ---104