பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உறுப்பு சுதந்திரத்திற்கான உரிமை 19. பேச்சுச் சுதந்திரம் முதலியவை பற்றிய குறித்தசில உரிமைகளுக்குப் பாதுகாப்பு. 20. குற்றச்செயல்களுக்கான குற்றத்தீர்ப்பு பொறுத்த பாதுகாப்பு. 21. உயிருக்கும், உடல்சார் உரிமைக்கும் பாதுகாப்பு. 21அ. கல்வி கற்பதற்கான உரிமை. 22. குறித்தசில நேர்வுகளில் கைதுசெய்தல், காவலில் வைத்தல் இவற்றிலிருந்து பாதுகாப்பு. சுரண்டலைத் தடுப்பதற்கான உரிமை 23. மனிதரை வணிகப் பொருளாக்குதல், வலுக்கட்டாயமாக வேலை சுமத்துதல் ஆகியவற்றிற்குத் தடை. தொழிற்சாலைகள் முதலியவற்றில் சிறார்களை வேலையமர்த்தம் செய்தலுக்குத் தடை. சமயச் சுதந்திரத்திற்கான உரிமை மனச்சான்று வழி ஒழுகுவதற்கான சுதந்திரமும் சுதந்திரமாகச் சமயநெறி ஓம்புதலும் ஒழுகுதலும் ஓதிப்பரப்புதலும். 26. சமயம் சார்ந்த காரியங்களை நிருவகிப்பதற்கான சுதந்திரம். குறிப்பிட்ட சமயம் எதனையும் வளர்ப்பதற்கான வரிகள் செலுத்துவது குறித்த சுதந்திரம். 28. குறித்தசில கல்வி நிறுவனங்களில் சமயப் போதனை பயிலவருவது அல்லது சமய வழிபாட்டுக்கு வருகை தருவது குறித்த சுதந்திரம். பண்பாடு, கல்வி பற்றிய உரிமைகள் 29. சிறுபான்மையினர் நலன்களுக்குப் பாதுகாப்பு. 30. கல்வி நிறுவனங்களை நிறுவவும் நிருவகிக்கவும் சிறுபான்மையினருக்குள்ள உரிமை. 31. (நீக்கறவு செய்யப்பட்டது) குறித்தசில சட்டங்களுக்குக் காப்புரை 31அ. உரிமை நிலச்சொத்துகள் 'முதலியனவற்றைக் கையகப்படுத்துவதற்கு வகைசெய்யும் சட்டங்களுக்குக் காப்புரை. 31ஆ. குறித்தசில சட்டங்களையும், ஒழுங்குறுத்தும்விதிகளையும் செல்லுந்தன்மை உடையனவாக்குதல். 31இ. குறித்தசில நெறிப்படுத்தும் கோட்பாடுகளைச் செல்திறப்படுத்தும் சட்டங்களுக்குக் காப்புரை. 31ஈ. (நீக்கறவு செய்யப்பட்டது). அரசமைப்புத் தீர்வழிகளுக்கான உரிமை 32. இந்தப் பகுதியினால் வழங்கப்படும் உரிமைகளைச் செயலுறுத்துவதற்கான தீர்வழிகள். 32அ. (நீக்கறவு செய்யப்பட்டது). 33. இந்தப் பகுதியினால் வழங்கப்படும் உரிமைகளைப் படையினர் முதலானோருக்குப் பொருந்துறச் செய்கையில் அவற்றை மாற்றமைவு செய்ய நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரம். 34. வரையிடம் ஒன்றில் படைத்துறையாட்சி செல்லாற்றலில் இருக்குங்கால், இந்தப் பகுதி வழங்கும் உரிமைகள் மீதான வரைத்தடை. 35. இந்தப் பகுதியின் வகையங்களுக்குச் செல்திறம் அளிப்பதற்காகச் சட்டமியற்றுதல்