பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19





483. சுற்றுச்சூழலைப்‌ பாதுகாத்து மேம்படுத்தலும்‌ காடுகள்‌, காடுவாழ்‌ உயிரினங்கள்‌ ஆகியவற்றைப்‌ பேணிக்‌ காத்தலும்‌.

அரசு, சுற்றுச்சூழலைப்‌ பாதுகாத்து மேம்படுத்துவதற்கும்‌, நாட்டின்‌ காடுகளையும்‌ காடுவாழ்‌ உரிரினங்களையும்‌ காப்பணைவு செய்துவருவதற்கும்‌ முனைந்து முயலுதல்‌ வேண்டும்‌. 49,தேசிய முக்கியத்துவம்‌ வாய்ந்த நினைவுச்சின்னங்கள்‌, இடங்கள்‌, பொருள்கள்‌

ஆகியவற்றைப்‌ பாதுகாத்தல்‌ :

தேசிய முக்கியத்துவம்‌ வாய்ந்ததென நாடாளுமன்றத்தால்‌ இயற்றப்பட்ட சட்டத்தாலோ

அதன்‌ வழியாலோ விளம்பப்படும்‌ கலை அல்லது வரலாற்றுச்‌ சிறப்பு வாய்ந்த நினைவுச்‌ சிள்ளம்‌, இடம்‌ அல்லது பொருள்‌ எதனையும்‌ கவர்ந்து செல்லல்‌, உருக்குலைத்தல்‌, அழித்தல்‌, அகற்றுதல்‌. அயலடைவு செய்தல்‌, அல்லது ஏற்றுமதி செய்தல்‌ இவற்றிலிருந்து பாதுகாப்பது அரசின்‌ கடமைப்பாடாக இருத்தல்‌ வேண்டும்‌. 50. ஆட்சித்துறையினின்றும்‌ நீதித்துறையைப்‌ பிரித்தல்‌ :

அரசின்‌ பொதுப்‌ பணியங்களில்‌ ஆட்சித்துறையினின்றும்‌ நீதித்‌ துறையினைத்‌ தனியாகப்‌ பிரிப்பதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்‌ வேண்டும்‌.

51, பன்னாடுகளிடையே அமைதியையும்‌ காப்புணர்வையும்‌ வளர்த்தல்‌ :

அரசு (இ) பன்னாடுகளிடையே அமைதியையும்‌ காப்புணர்வையும்‌ வளர்ப்பதற்கும்‌;

ழூ ரிடையே நேர்‌ நனம்திப்னாவும்‌ ஜோய்ந்த என்ட்‌ ம்‌ இ ஒழுங்கமைவுள்ள மக்களினங்கள்‌ தமக்குள்‌ எழும்‌ தொடர்புகளில்‌ பன்னாட்டுச்‌

ர்பதற்கும்‌ 9. பன்னாடுகளிடையே எழும்‌ பூசல்களுக்குப்‌ பொதுவரின்‌ தீர்ப்புவழி தீர்வு காண்பதை எஊக்குவிப்பதற்கும்‌ முனைந்து முயலுதல்‌ வேண்டும்‌;

பகுதி 1*-அ அடிப்படைக்‌ கடமைகள்‌ 51இ. அடிப்படைக்‌ கடமைகள்‌ :

பின்வருவன இந்தியாவின்‌ குடிமக்கள்‌ ஒவ்வொருவரின்‌ கடமைகள்‌ ஆகும்‌--

(இ) அரசமைப்பு ஆவணத்திற்கு இணங்கி இயங்குதல்‌; மேலும்‌, அதன்‌ குறிக்கோள்கள்‌, உறுப்பமைவுகள்‌, நாட்டுக்கொடி, நாட்டுப்பண்‌ இவற்றை மதித்து நடத்தல்‌;

(இ) நமது நாட்டு விடுதலைப்‌ போராட்டத்திற்கு உணர்வூட்டிய உயர்‌ குறிக்கோள்களைப்‌ பேணிப்‌ பின்பற்றுதல்‌;

(இ இந்திய நாட்டின்‌ இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை ஒங்கச்செய்து ஒம்பிக்காத்தல்‌;

8) வேண்டுங்கால்‌, நாட்டினைக்‌ காத்தல்‌; மற்றும்‌ நாட்டுப்பணி ஆற்றுதல்‌;