பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இதழாசிரியர் 101 அனுப்பப்பட்டது என்று முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பே இந்த இதழுக்குப் பெயராக அமைந்தது எனலாம். தம்புசாமி முதலியார் என்பவர் எஸ்.ஆர். சுப்பிரமணியத்துக்கு வழங்கிய உருபா 5000 இவ்வேடு தோன்றக் காரணமாயிருந்தது. பத்திரிகை நடத்தும் பொறுப்பையும் இளைஞரான எஸ்.ஆர். சுப்பிரமணியம் ஏற்றார். தம்புசாமி முதலியார் உரிமையாளராகவும், எஸ்.ஆர். சுப்பிரமணியம் வெளியீட்டாளராகவும் பாரதிதாசன் ஆசிரியராகவும் பொறுப்பேற்கத் தனிப்படி நான்கணா விலையில் திங்கள் இதழகாகப் பிறந்தது. கவிதா மண்டலத்தின் நோக்கங்களாகப் பாரதிதாசன் வெளியிட்ட கருத்துக்கள் வருமாறு: 1. எண்ணங்கள் யாவும் கவிதை வடிவில் அமைந்திருக்க வேண்டும். எதைப்பற்றியும் எழுதலாம். 2. எளிய நடையில் நவகவிதை சுவையொழுகும்படி தந்த பூரீசுப்பிரமணிய பாரதியாரைப்போல் நூற்றுக் கணக்கான பாரதிகள் நமது கவிதா மண்டலத்தில் தோன்ற வேண்டும். 3. தேசியம், சமுதாய சீர்திருத்தம், பெண்ணுரிமை, இயற்கையழகு காதல், வீரம் பற்றிய பாடல்களை விரைந்து உதவுக. நாடக வடிவிலும் கவிதை இருக்கலாம். முகப்பில் பாரதியின் படமும், பாட்டினில் அன்பு செய் என்ற ஆத்திசூடி வரியும் இடம் பெற்றன. சுத்தானந்த பாரதி, தேசிக விநாயகம் பிள்ளை, சங்கு சுப்பிரமணியம், ப. ஜீவானந்தம் ஆகியோரும் இவ்வேட்டில் எழுதினர். பாரதியின் வெளிவராத பாடல்களும், ஆங்கில பிரெஞ்சுக் கவிஞர்களின் சிறந்த பாடல்களின் மொழிபெயர்ப்புகளும் இதில் இடம் பெற்றன. மொத்தம் ஏழு இதழ்களே வெளிவந்தன. பின்னர் கவிதா மண்டலம் கருத்து வேற்றுமையால் நிறுத்தப்பட்டது. முல்லை - 1946 'இதன் ஆதரவாளர் கவியரசர் பாரதிதாசன் என்ற முத்திரையோடும். பதிப்பாளர்ப. முத்தையா என்ற குறிப்போடும் சென்னை பிராட்வேயிலிருந்து பளபளப்பாக வெளிவந்தது 'முல்லை' எனும் ஏடு.