பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சில சிறப்புச் செய்திகள் 111 1968 - இரண்டாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யொட்டி பாரதிதாசன் உருவச்சிலை சென்னைக் கடற்கரையில் நிறுவப்பட்டது. - 1969 - பாரதிதாசனின் பிசிராந்தையார் நாடகத்திற்குச் சாகித்திய அகாதமி பரிசு வழங்கியது. 1971 - ஏப்ரல் 29ஆம் நாள் பாரதிதாசன் பிறந்த நாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப்பெற்றது. ஒவ்வோராண்டும் அரசு விழா நிகழ்கிறது. பாவேந்தர் வாழ்ந்த 95ஆம் எண்பெருமாள் கோயில் இல்லம், அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவு நூலகமும், காட்சிக் கூடமும் நிறுவப்பட்டன. 1972 - ஏப்ரல் 29இல் புதுவை அரசினரால் பாவேந்தர் முழு உருவச்சிலை புதுவையில் திறந்து வைக்கப்பட்டது. S0.4.1982 - ஏப்ரல் திங்களில் பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் திருச்சிராப் பள்ளியில் உருவாக்கப்பட்டது. 15.5, 1993 - பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 'பாரதிதாசன் உயராய்வு மையம் அமைக்கப்பட்டது. இவைகளன்றித் தமிழக அரசால் பாரதிதாசன் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. தமிழகத்திலும் புதுவை மாநிலத்திலும் பாரதிதாசன் பெயரில் தெருக்கள், ஊர்கள், நகர்கள், உருவாக்கப் பட்டுள்ளன; கலைக்கல்லூரிகளும், பொறியியற் கல்லூரிகளும் நிறுவப்பட்டுள்ளன; பல அமைப்புகளும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன: தமிழக அரசும் புதுவை அரசும் பல இலக்கிய விருதுகளும், பரிசுகளும் ஆண்டுதோறும் அவர் பெயரால் வழங்குகின்றன.