பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தேசியக் கவி 37 பாரதிதாசன் கதர் இராட்டினப் பாட்டு' என்ற நூலை வெளியிட்ட தோடு கதர்த் துணியையும் தோளில் சுமந்து தெருத் தெருவாக விற்றார் என்ற சேதி குறிப்பிடத் தக்கது. கதர்ப்பாட்டு உணர்ச்சி பூர்வமாக எழுதப் பட்டுள்ளது. அன்னியர் நூலைத் தொடோம் என்ற சேதி அறைந்திடடா புவிமுற்றும்-எங்கள் அறுபதுகோடி தடக்கைள் ராட்டினம் சுற்றும் சுற்றும் சுற்றும் இன்னல் செய்தார்க்கும் இடர்செய்திடாமல் இராட்டினம் சுற்றென்று சொல்லும்-எங்கள் ஏதமில் காந்தி யடிகள் அறச்செயல் வெல்லும் வெல்லும் வெல்லும் கன்னலடா எங்கள் காந்தியடிகள் சொல் கழறுகிறேன் அதைக் கேளே-நீவிர் கதரணிவீர் உங்கள் பகைவரின் வேரங்குத் துளே துளே துளே! காந்தியடிகளின் நிர்மாணத் திட்டங்களுள் குறிப்பிடத்தக்கது தேசியக் கல்வித் திட்டம். "ஆங்கிலக்கல்வியால் படித்த மக்களுக்கும் பாமர மக்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி ஏற்பட்டுவிடும். பாமர மக்களின் உள்ளம் வளர வழியின்றிச் சிறைப்பட்டே இருக்கும். அதனால் சுயராஜ்ஜியத்தை நிர்ணயிப்பதில் பாமர மக்கள் எந்தப் பங்கும் வகிக்க முடியாது' என்று மிகுமக்கள் நலனுக்கெதிரான ஆங்கில மோகத்தைக் காந்தியடிகள் சுட்டுகிறார். இக்கருத்தை வலியுறுத்த வந்த பாரதிதாசன் செந்தமிழாற் கம்பன் சிறந்தானா நேற்றிங்கு வந்தவரின் ஆங்கிலத்தால் இன்பம் வளர்த்தானா? அருச்சுனன்போல் கண்ணன்போல் ஆக நினைத்தால் மருளுட்டும் ஆங்கிலத்தை மாய்ப்பீர் உம் சிந்தையிலே வந்தவர்.பால் நீங்களெல்லாம் வாங்கியுண்ணக் கற்றீர்கள் நொந்த உமது குலம் ஈடேற நோக்கீரோ? என்று பாடுகிறார்.