பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தேசியக் கவி 39 மோரோடு சுளைத் தயிரும் - மணம் மொகுமொகு மொகுவென நெய்ப் பயனும் தருகின்ற தாய் என்றும், குவலயம் தனக்கொரு செவிலி என்றும், பசுவைப் பலபடப் பாராட்டுகிறார் பாவேந்தர். நாடெங்கும் பசுச்சாலைகள், புல்வெளிகள், பசுக்குளங்கள் அமைக்க வேண்டு மென்று மக்களைக் கேட்டுக் கொள்கிறார். மேல்நாட்டு மதுவுக்குப் புகழ்பெற்ற புதுச்சேரியில் வாழ்ந்த பாரதிதாசன், மதுவிலக்குப் பணியிலும் தம்மை இணைத்துக்கொண்டு பாடிய மூன்று பாடல்கள் இப்போது கிடைத்துள்ளன. குடியர்கள் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு தெளிவு பெற்றுப் பாரத தேவியிடம் கூறுவதாக ஒரு பாடல்: அம்மா இனிக்குடிக்க மாட்டோம் அதன்தீமை கைமேல் கனிபோலக் கண்டுவிட்டோம் ஏழைகள் பொய்ம்மானைப் பின்பற்றி ராமன் புரிந்ததுபோல் இம்மதுவின் மாயங்கண் டிடறித் தலைகவிழ்ந்தோம் நஞ்சிருந்த பாண்டத்தை நக்கி வசமிழந்து நெஞ்சில் உரமிழந்து நிதியிழந்தோம் எந்தாயே! பஞ்சத்தைத் தேசத்தைப் பாபத்தைப் பெண்டாட்டி நெஞ்சத்தை எண்ணி விஷப்புனலை நீக்கிவிட்டோம் என்று பாடி மதுவின் தீமைகளைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றார். பிள்ளைப் பாட்டாக, மதுவிலக்கு விடுகவி ஒன்றும் பாடுகிறார் கவிஞர். ஈக்கள் எறும்புகள் எலிகள் பூனைகள் எருதுகள் குதிரைகள்