பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


40 பாரதிதாசன் பூக்கள் மரங்கள் செடிகள் கொடிகள் புளிகள் மிளகாய்கள் ஊக்கங் கெடவைத்து உங்கள் பணத்தை ஒழித்துப் பாரதத்தை ஏக்கங் கொள்ள அறிவை மயக்குவது இவற்றில் எது சொல்வாய்? இப்பாடலில் பன்மை விகுதியாகிய 'கள் அடிதோறும் மீண்டும் மீண்டும் வருவதைக் காணலாம். இதில் குறிப்பிட்டவற்றுள் புளிகள் என்பது விடை புளித்த கள்ளைச் சாப்பிட்டால் மயக்கம் கொள்வது போல் மயங்கிப் பின் தெளிவடைந்து விடையைக் கண்டு பிடிக்கிறோம். "நாட்டின் செல்வத்தில் பெரும்பகுதி சிலரிடத்தில் மட்டுமே குவிந்திருக்கிறது. ஆனால் கோடிக்கணக்கான மக்கள் உண்ணவும் உடுக்கவும் வகையில்லாது அவதிப்படுகின்றனர். நாட்டில் பொருளாதார சமத்துவம் தேவை. மக்களிடையில் பொருளாதார ஏற்றத் தாழ்வு இருக்கின்ற வரையில் அகிம்சை முறையில் ஆட்சி நடத்துவது சாத்தியமில்லை' என்றார் காந்தியடிகள். இக்கருத்தை மையமாக வைத்துப் பாரதிதாசன் பாடிய பாடல் குறிப்பிடத்தக்கது. போய்த்தொடுவோம்.அந்த விண்னை அமுதத்தைப் பூமிக்கெல்லாம் தருவோம் தாய்கொடுத் தாளிந்தச்சத்திய வேலென்று தாரணி ஆண்டிடு வோம் ஏழைகள் கையிருப் புள்ளவர் என்னும் இரட்டையைக் கொன்றிடுவோம் கூழுக்கொருவன் அழும்படி ஆண்டிடும் கோலை முறித்திடுவோம். 'இந்நாட்டுச் சேரிகளில் அரிஜனங்கள் தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள கொடுமைக்கு ஒப்பானது உலகில் வேறெங்கும் இல்லை. தீண்டாமை இந்து மதத்துக்கு ஏற்பட்ட சாபம்' என்று காந்தியடிகள் கூறியுள்ளார்.