பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5 தமிழ் மறவர் எனையின்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் தினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால் செத்தொழியும் நாள் எனக்குத் திருநாள் ஆகும் சங்ககாலந்தொட்டுத் தமிழ் பலராலும் பலவாறு புகழப்படுகிறது. எல்லையற்ற அடைமொழிகளைப் பெற்றது தமிழ். செந்தமிழ், தண்டமிழ் பைந்தமிழ், பசுந்தமிழ், இன்றமிழ், இளந்தமிழ், முத்தமிழ், மூத்ததமிழ், வண்டமிழ், வான்தமிழ், தேன்தமிழ், தீந்தமிழ், பண்தமிழ், பழந்தமிழ்,திருத்தமிழ், தெய்வத்தமிழ், தெள்ளுதமிழ் என்று பண்டை நாள் தொட்டுப் புலவர்கள் தமிழைப் பல்லாற்றானும் சிறப்பித்துக் கூறியுள்ளனர்; தமிழினைத் தம் உயிரினும் மேலாகப் போற்றிப் பாராட்டி வந்துள்ளனர். பெயர் தெரியாத ஒரு புலவர் தமிழ் விடுதூது என்ற நூலை எழுதித் தமிழைப் புகழ்ந்து பாராட்டி அதைத் தன் காதலனுக்குத் தூதாக அனுப்பியுள்ளார். ஆனால் தமிழின் சிறப்பு, வளம், இன்றைய நிலை அதை முன்னேற்றும் வழிமுறைகள் இவற்றை ஆய்ந்து முதன்முதலாகக் கவிதை நூலாக எழுதிய பெருமை பாரதிதாசனையே சாரும். அதுதான் தமிழியக்கம்' எனற அரிய நூல். ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன்னேற்றம் கண்டறிவாய் எழுந்திரு நீ! இளந்தமிழா கண்விழிப்பாய்! இறந்தொழிந்த