பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ் மறவர் 53 பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும் நீ படைப்பாய்! இந்நாள் தொண்டு செய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெ ழுந்தே! என்று இளந்தமிழர்களைத் தட்டி எழுப்புகிறார். ஆடவர்கள் மட்டும் தமிழுக்குத் தொண்டு செய்தால் போதாது. அணியிழை மகளிரும் தமிழ்த் தொண்டாற்ற வேண்டுமென்று அறைகூவல் விடுக்கிறார். ஒருவானில் பன்னிலவாய் உயர்தமிழப் பெண்களெலாம் எழுக! உங்கள் திருவான செந்தமிழின் சிறுமையினைத் தீர்ப்பதென எழுக! நீவிர் பெருமானம் காப்பதற்கு வாரீரேல் உங்கள்நுதற் பிறையே நானும் மருமலர் வாய்த் தாமரையும் கனியுதடும் நன்னெஞ்சும் வாட்டம் எய்தும் என்று அன்புடன் எச்சரிக்கை விடுகிறார். கடைத்தெருவில் விளம்பரப் பலகைகளில் தமிழ் ஒதுக்கப்படும் நிலை கண்டு மணக்கவரும் தென்றலிலே குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை தணிப்பரிதாம் துன்பமிது! தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை! என்று வருந்திக் கண்ணீர் விடுகிறார் பாரதிதாசன்