பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8 பாரதிதாசன் மிளகுரசம், வெற்றிலை முதலியவற்றைக் கப்பலில் பிரான்சு முதலிய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார். சுப்புரத்தினத்தின் அண்ணன் சுப்பராயர் சிறந்த சோதிட வல்லுநர். புதுவைச் செல்வர்களின் குடும்பச் சோதிடர். சுப்புரத்தினம் சிறுவராக இருக்கும்போதே வாணிபத்தில் இழப்பு ஏற்பட்டுக் குடும்பம் நலிவுற்றது.

கனகசபையார் குடும்பம் பழுத்த வீரசைவக் குடும்பம். அவருக்கு வள்ளலாரின் மீதும், அவரது சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் மீதும், ஈடுபாடு அதிகம். இச்சங்கத்தின் கொள்கை ஏடான, 'சன்மார்க்க விவேக விருத்தி இதழ் நடத்தத் திங்கள்தோறும் நிதி உதவுவோர் பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றுள்ளது. கலை, இலக்கியம்,நாடகம் ஆகிய துறைகளில் ஆர்வம் மிக்கவர் கனகசபை. பெரும்புலவர் பு:அ. பெரியசாமி பிள்ளை இவருக்கு நண்பர்.

சுப்புரத்தினம் தம் இளமைக் காலக் கல்வியைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

'அந்தக் காலத்தில் தமிழ்ப்புலவர்களால் தனிமுறையில் நடத்தப்படும் பள்ளிக் கூடங்களுக்குப் பெயர் திண்ணைப் பள்ளிக் கூடம். தமிழுக்கும் தமிழ் நெறிகளுக்கும் புறம்பான பள்ளிக் கூடங்களை யெல்லாம் சர்க்கார் பள்ளிக் கூடம்என்பார்கள். எனக்கு விவரம் தெரிந்த ஆறு ஆண்டு முதல் பதினேழு ஆண்டு வரைக்கும் எனக்குத் திண்ணைப் பள்ளி தவிர உலகில் வேறு எந்தப் பள்ளியும் தெரியாது.

திண்ணைப் பள்ளிகளில் உரைநடை அரும்பத விளக்கத்தோடு பாடம் நடக்கும். செய்யுள்கள் மூலபாடம் மட்டும் நெட்டுருவாக்கப் படும். மற்றும் பொன்னிலக்கம் எண்சுவடி கருத்தாகச் சொல்லிக் கொடுப்பார் ஆசிரியர். பன்னிரெண்டு வயதில் திருக்குறள் 1330 செய்யுள்களும் மனப்பாடம் எனக்கு. குமரேச சதகம் முதலியவைகளும் மனப்பாடம். கணக்கில் என் பள்ளியில் சட்டாம் பிள்ளை நான்” புதுவை வட்டாரத்தில் புகழ்பெற்று விளங்கிய திருப்புளிசாமி அய்யாவின் திண்ணைப் பள்ளியில் பல ஆண்டுகள் பயின்ற