பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பெண்ணுரிமை பேணியவர் 89 வாழ்வுக்கோர் மாப்பிள்ளையைக் கண்டு - காட்டித் தேவை இவன் எனவே செப்பும் மொழி - எனக்குத் தேன்கனி தித்திக்குங்கற் கண்டு இந்த வளர்ச்சியெல்லாம் பெண்களுக்குக் கல்வியால்தான் வரும் என்று கூறுகிறார் கவிஞர். அதனாற்றான் பெண்களுக்குக் கல்வியே சிறந்த அணிகலன் என்பதை கற்பது பெண்களுக்காபரணம் - கெம்புக் கல்வைத்த நகை தீராத ரணம் என்று பாடுகிறார். செல்வர்கட்கு வரதட்சணை அவர்கள் தகுதியை வெளிப்படுத்தும் அளவுகோலாக இருக்கலாம். ஆனால் பெண்களைப் பெற்ற ஏழைகளுக்கு அது கசையடி படித்துப் பட்டம் பெற்று. அரசாங்கட் பணிகளில் இருக்கும் தம் பிள்ளைகளின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்வதில் பெற்றோர்கள் குறியாய் இருக்கின்றனர். பெண் படித்தவளா, அறிவுள்ளவளா, அழகானவளா, குடும்பத்துக் கேற்றவளா என்பதைவிட அவள் சுமந்துவரும் நகைகளின் எடை, அவள் கொண்டு வரும் வரதட்சணை, பேழைப்பணம் ஆகியவற்றின் அளவு ஆகியவற்றிலேயே அவர்கள் கவனம் உள்ளது. பெற்றோரின் இந்தப் பேராசையையும், அறிவீனத்தையும் பெண்குரங்குத் திருமணம் என்ற பாடலில் எள்ளி நகையாடுகிறார் பாவேந்தர். ஏழை அண்ணாசாமி தன் மகனுக்குப் பணக்காரர் வீட்டில் பெண் தேடுகிறான். ஏழையின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட பணக்காரன் 'உன் மகனுக்குப் பெண் கொடுப்பதில் தடையேது மில்லை. ஆனால்...' என்று இழுக்கிறான். ஆனால் என்ன?’ என்று கேட்கிறான் ஏழை. அதற்குப் பண்ககாரன,