பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


90 பாரதிதாசன் 'பெற்ற பெண்ணைக் கொடேன் வளர்க்கின்ற பெண்ணுண்டு பேச்செலாம் கீச்" என்றனன். அதற்கு அண்ணாசாமி பெண்ணுக்குக் கீச்சுக் குரல் அவ்வளவுதானே? பரவாயில்லை. அதற்காக வரதட்சணையை வளர்ப்புப் பெண்ணுக்குக் குறைவாகவா கொடுக்கப் போகிறீர்கள்?" என்று சாதுரியமாகப் பேசினான். பணக்காரன், 'என் பெண் இரட்டை வால் அல்ல' என்று சொன்னான். 'உங்கள் பெண் அடக்கமானவள் என்பதை இவ்வாறு குறிப்பிடுகிறீர்கள். 'மகிழ்ச்சிதான்' என்றான் ஏழை அண்ணாசாமி. 'என்றன் பெண்கால்வரைக்கும் கருங்கூந்தல்' என்றான் பணக்காரன். 'ஒட்டுமயிர் வைத்து அலங்கரித்துக் கொள்ளும் இக்காலத்தில் கால்வரையிலும் நீண்ட கருங்கூந்தல் சிறப்புத்தானே? என்று மகிழ்ந்து கூறிய அண்ணாசாமி திருமணத்துக்கு நாள் குறித்தான். அண்ணாசாமியின் அறியாமை யையும் பேராசையையும் கவிஞர் கீழ்க்கண்ட வரிகளால் அளந்து காட்டுகிறார். கண்ணுள்ள மகனுக்குத் தந்தைநியமித்தபெண் கழுதையா? அல்ல அதுதான் பெரும்பணக்காரன் வளர்த்திட்ட ஒற்றைவால் பெட்டைக் கருங்குரங்கு