பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பெண்ணுரிமை பேணியவர் 91 பீடுகய மரியாதை கண்டுநல முண்டியிடும் பெரியஎன் அன்னைநாடே! பணக்காரன், தகுதி தெரியாமல் பெண்கேட்க வந்த ஏழை அண்ணாசாமியைக் கேவலப்படுத்த நினைக்கிறான். தன் எண்ணத்தைப் பேச்செலாம் கீச்', 'இரட்டை வால் அல்ல கால் வரைக்கும் கருங்கூந்தல்' என்ற சொற்களால் குறிப்பாக வெளிப்படுத்துகிறான். ஏழையின் பேராசை அவன் அறிவைக் குருடாக்கிவிட்டது. இப்பாடலில் அமைந்துள்ள கற்பனை மிகச் சிறப்பானது. பணக்காரனின் பேச்சுச் சாதுரியம் கவிஞரின் அறிவு நுட்பத்துக்கு அளவுகோல். பெண்ணியம் பற்றித் தீவிரமான கருத்துக்களை மற்ற எந்தக் கவிஞரும் கூறாத அளவுக்குப் பாரதிதாசன் கூறியுள்ளார். கைம்பெண் மறுமணம் பற்றி எழுத்தாளர் வ.ரா. போன்றவர்களும் வேறு சிலரும் உரைநடையில் புதினங்களாகவும், சிறுகதைகளாகவும் எழுதி யுள்ளனர். ஆனால் கவிதையில் கைம்மை மணத்தை முதன் முதலில் ஆதரித்து எழுதியவர் பாரதிதாசனே. எனவே பெண்கள் சமுதாயம் பாரதி தாசனுக்கு நிறையவே நன்றிக் கடன்பட்டிருக்கிறது.