பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நானும் விந்தனும் 1950-ஆம ஆண்டு கல்கி' பத்திரிகையில் விந்தன் எழதிய 'பாலும் பாவையும் நாவலின் கையெழுத்துப்பிரதியைப் படித்தது முதல் அவர் பேரில் மதிப்பும் மரியாதையும் உண்டானது விந்தனின் 'முல்லைக்கொடியாள் சிறுகதைத் தொகுப்பைத் தேடிப் படித்தேன் 'முல்லைக் கொடியாள் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் வித்தியாசமானவை இதுவரை ஏழை எளியவர்களைப் பற்றி உழைக்கும் வர்க்கததைப் பற்றி, எந்த எழுததாளரும் எழுதாத நிலையில விந்தன், அவர்கள் அனுபவிக்கும் துன்பத்துயரங்களை உணர்ச்சித் துடிப்புடன் எழுதியதைக கண்ட போது அவர் மேல் எனககுள்ள மதிப்பு கூடியது அதனால் அவரின கதைகளை தொடர்ந்து படித்தேன் 1954-ஆம் ஆண்டு விந்தன் மனிதன் பத்திரிகையை வெளியிட்டார் அச்சமயத்தில் ஒருநாள் என்னைத் தேடி வந்தார், சிறு உதவி கேட்டு அன்று முதல் விந்தனுக்கும் எனக்கும் நெருக்கம் ஏற்பட்டது ? 1960-ஆம் ஆண்டு கவிஞர் தமிழ்ஒளி, என்னை விந்தனின் 'பாலும் பாவையும் நாவலை நாடகமாக்கப் பரிந்துரைத்தார் அதன்படி 'பாலும் பாவையும் நாடகமாக 15-7-1964-இல் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் டாக்டர் மு. வரதராசனார் தலைமையில் என் தனி முயற்சியால் அரங்கேறியது நாடகத்திற்கான பாடல்களை விந்தனும் கவிஞர் தமிழ்ஒளியும் எழுதினார்கள் 1975-இல் விந்தன் மரணம் அடைந்தார் அதன் பின்னர், 1982-இல் 'விந்தனும் விமர்சனமும் என்று பல எழுத்தாளர்கள் விந்தன் பற்றி எழுதிய தொகுப்பு நூலை வெளியிட்டேன. 1983-இல் எனக்கும் விந்தனுக்கும் உள்ள நட்பை, அவரின் வாழ்க்கையை ‘மக்கள் எழுத்தாளர் விந்தன்' என்ற பெயரில் எழுதி வெளியிட்டேன் இந்த நூலை குமுதம்', 'ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகள் பாராட்டின 1987-இல் விந்தன் எழுதிய ஆறு நாவல்களையும் விரிவாக ஆய்வு செய்து விந்தன் நாவல்கள் என்ற நூலை வெளியிட்டேன்