பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விந்தன் இவருடைய படைப்புகள் வித்தியாசமானவை தமிழில் ஏழை எளியவர்களை- உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தினரைப் பற்றிச் சிந்தித்து சிறுகதைகளை எழுதியவர் 1946 இல் தமிழக அரசு - தமிழ் வளர்ச்சி கழகம் முதல் பரிசினை விந்தனின் முல்லைக் கொடியாள் படைப்புக்கு அளித்துச் சிறப்பித்தது கல்கி பத்திரிகையில் பணியாறறியபோது இவர் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார் அதில் பாலும் பாவையும் என்ற நாவல் மேடை நாடகமாகவும், வானொலியில் அனைத்து இந்திய மொழிகளிலும் ஒலிப்பரப்பப்பட்டது இந்நாவலின் லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாயின கன்னடத்திலும் மொழிபெயர்த்து வெளி யிடப்பட்டது மேலும் ஆறு நாவல்கள்- ஏழு திரைப்படங்களுக்கு வசனம் - ஒரு சில பாடல்களும் எழுதியுள்ளார் பாட்டில் பாரதம் என்ற காவியத்தைப் படைத்தார் புதுமையான முறையில் 'ஓ மனிதா போன்ற சிற்றிலக்கியங்கள் எழுதினார் தினமணி பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்தபோது இயல் இசை மன்னர், எம்.கே டி பாகவதர் பற்றி முதன்முதலாக வாழ்க்கை வரலாறு எழுதியவரும் இவரே சிறைசாலை சிந்தனை என்ற தலைப்பில் நடிகவேள் எம் ஆர் ராதா பற்றி வாழ்க்கை வரலாறு எழுதியவர் மு. பரமசிவம் சென்னையே பிறப்பிடம் செந்தமிழே தாய்மொழி பள்ளியில் இரண்டு ஆண்டே படித்தவர் கல்கி அச்சகத்தில் பணியாற்றிய இவர் கல்கி எழுதிய சிவகாமி சபதத்தையும் விந்தனின் பாலும் பாவையும் நாவலையும் கையெழுத்துப் பிரதியிலேயே படித்தவர் விந்தனின் இறுதிக்காலம் வரை அவருடன் நெருங்கிய நண்பராகப் பழகியவர் மூன்று நாடகங்கள் - மூன்று தொகுப்பு நூல்கள்ஆறு வாழ்க்கை வரலாறுகள் - ஒரு நாவல்- ஒரு ஆய்வு நூல் ஆகியவை இவரால் எழுதப்பட்டவை கற்சிலை என்ற சிறு பத்திரிகையை நடத்தியவர் Vindhan (Tamil) Rs.25 ISBN-81-260-1246–3 ( இருபத்திரண்டு இந்திய மொழிகளில் நூல்கள் வெளியிடும் சாகித்திய அக்காதெமி, உலகிலேயே மிகப் பெரியவெளியீட்டகம்.