பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8 விந்தன் 1999-இல் விந்தன் கட்டுரைகளைத் தொகுத்து விந்தன் கட்டுரைகள் என்ற நூலை வெளியிட்டேன் அதே ஆண்டில் விந்தன் நடத்திய 'மனிதன்' இதழில் வெளியான சிறந்த கதை, கட்டுரைகள், கவிதைகளைத் தொகுத்து 'மனிதன் இதழ் தொகுப்பு என்னும் நூல் வெளிவர உதவினேன் 2000-இல் 92 விந்தன் கதைகளின் தொகுப்பு இரண்டு நூல்களாக வெளிவந்தது 2001-இல் விந்தனின் பத்து ஆண்டு திரையுலக வாழ்க்கையை எழுதி திரையுலகில் விந்தன்' என்ற நூல் வெளிவந்தது இருபத்தைந்து ஆண்டுகள் விந்தனோடு பழகிய நான், அவரின் மறைவிற்குப் பின்னர் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக அவரைப்பற்றி பேசியும் எழுதியும் வருகிறேன்.