பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வாழ்க்கைப் பாதையிலே. 17 கிடைதத போதெல்லாம் விந்தனின் குடும்ப நிலையை எடுத்துச் சொல்வார். கல்கி மெளனமாக இருப்பதை அறிந்து, அம்மாவிடம் (எம்.எஸ்)கண்கலங்க நின்று, 'உன்னையும் சேர்த்து அனுப்பி விடுவேன் என்று கோபப்பட்ட சதாசிவத்தின் மனத்தை நெகிழ வைத்து விந்தனை - விபத்திலிருந்து மீட்டு ஒரு புதிய உலகத்தைக் காட்டிய பெருமை இராஜாபாதருக்கே உரியது. எதிர்பாராமல் நடந்து விட்ட இந்தச் சம்பவத்தால் ஒரு வார கால சம்பளத்தை இழந்த விந்தன் இதன் தன்மைகளை ஆழமாக நோக்கி ஓர் எச்சிரிக்கையாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் அவரின் படைப்புகளின் அதன் பாதிப்புகள் பலமாக ஒலித்தன. 'ஏமாந்துதான் கொடுப்பீர்கள்?' என்னும் சிறுகதை தொகுப்பின் முன்னுரையில் வாழ்ந்தால் லோ சர்க்கிளோடு வாழ்வேன்; செத்தாலும் லோ சர்க்கிளோடு சாவேன்' என்று தெளிந்த தீர்மானத்தோடு கூறினார். துணையாசிரியர் ஆனார் தொழிலாளி விந்தன்! விந்தன் எழுத்தில் நம்பிக்கை கொண்ட பேராசிரியர்கல்கி, விந்தன் ஒரு தொழிலாளி என்றாலும் அவர் துணையாசிரியராக இருப்பதற்கு தகுதி வாய்ந்தவர் என்பதை உணர்ந்து அவரை கல்கி ஆசிரியர் குழுவில் இணைத்துக் கொண்டார். இந்த இணைப்பு ஆசிரியர் குழுவில் ஒரு போராட்டத்தை உருவாக்கிச் சிலரை போர்க்கொடி உயர்த்தவும் செய்தது. அப்பொழுது கல்கி இதழின் ஆசிரியர் குழுவில் திரு. எம்.எல். சபரிராஜன், சோமாஸ்காந்தன், ராமசாமி (துமிலன்), இராமகிருஷ்ணன், (வசந்தன்), வேங்கடராமன் (நாடோடி) ஆகியோர் பணியாற்றினர். இவர்களில் காலஞ்சென்ற வசந்தன் எழுத்தும் பத்திரிகையும் படித்தவர்க்கத்தின் ஏகபோகச் சொத்து என்று தவறாக நம்பிய முன்கோபி, பலமுறை கல்கியிடம் சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்து சென்று 'பாரிஜாதம்' என்ற மாத இதழைச் சில மாதங்கள் நடத்திச் சிரமங்களுக்கு ஆளாகி அகால மரணம் அடைந்த அனுதாபத்துக்குரிய எழுத்தாளன். இந்த வசந்தன்தான் விந்தன் 'கல்கி ஏட்டின் ஆசிரியர் குழுவில் சேர்ந்தபோது துள்ளியெழுந்து ஆசிரியர் குழுவிற்குத் தீட்டு பட்டுவிட்டது போல் ஆர்ப்பரித்து 'எனக்குச் சமமாக ஒரு தொழிலாளி துணையாசிரியராக இருப்பதா? ஒன்று நான் இருக்க வேண்டும். அல்லது அந்தத் தொழிலாளி இருக்க வேண்டும்' என்று பேராசிரியர் கல்கியிடம் போராட்டம் நடத்தினார். நாடோடியின் துணையுடன்.