பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வாழ்க்கைப் பாதையிலே 19 எழுந்தது. அப்போது ஆசிரியர் கல்கி சொன்னார் "இரண்டு குழந்தை களை நல்ல விடுதியாகப் பார்த்து சேர்த்துவிடு; அவர்கள் பாதுகாப்பு தானே முக்கியம்' என்று ஆசிரியர் சொன்னதை கேட்காமல் அவரின் பாட்டனார் போல தந்தையைப் போல் இரண்டாம் கல்யாணத்தை முடித்தார். 13.07.1944 அன்று சரஸ்வதி என்னும் பெண்மணியை மணந்தார். சரஸ்வதி அம்மையாருக்கு ஆறு குழந்தைகள் பிறந்து அவற்றைக் காப்பாற்ற கஷ்டப்பட்டபோதுதான் 'அன்றே கல்கி சொன்னார், அன்றே கல்கி சொன்னார் என்று ஆசிரியர் சொன்னதை நினைத்துக் கொண்டார் விந்தன். முதல் எழுத்தாளர் விந்தன் 1946-இல் விந்தனின் 'முல்லைக் கொடியாள் என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளி வந்தது. அதே ஆண்டிலேயே தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. கழகம் அளிக்க முன்வந்த முதல் பரிசைப் பெற்ற முதல் எழுத்தாளர் விந்தன் அவர்களேயாவர். 1947இல் முற்போக்குச் சிந்தனையாளர் முருகு சுப்பிரமணியம் புதுக்கோட்டையிலிருந்து 'பொன்னி' என்னும் இலக்கிய இதழை வெளியிட்டார். 01.03.1947 அன்று. 01.05.1948இல் பொன்னி இதழில் நக்கீரன் என்னும் பெயரில் கண் திறக்குமா? என்ற தொடர்கதையை எழுதினார் விந்தன். இடதுசாரி இலக்கியவாதிகள் பலரும் கண் திறக்குமா என்ற நாவலைப் படித்து விந்தனைப் பாராட்டினர். அப்படிப் பாராட்டிய வாசகர்களில் ஒருவர் 'விந்தன் ஏன் கல்கியில் தொடர்கதை எழுதக்கூடாது' என்று கேட்டு கல்கிக்குக் கடிதம் எழுதினார். அதன் தொடர்பாக விந்தனை விசாரித்த கல்கி விந்தனை கல்கியில் தொடர்கதை எழுதும்படி கேட்டுக் கொண்டார். அதன் பிறகுதான் விந்தன் கல்கியில் 'பாலும் பாவையும் என்ற தொடர் கதையை எழுதினார். கல்கி ஆசிரியர் குழுவில் இருந்து விலகல் பிறர் எழுத்தை நான் படிப்பதில்லை என்று பேசிய பல எழுத்தாளர்களைப் பலமுறை படிக்க வைத்த நாவல் விந்தனின் பாலும் பாவையும். சொல் புதிது, சுவை புதிது என்று படித்தவர்கள் பாராட்டிய இந் நாவலை எழுது என்று சொன்ன ஆசிரியர் கல்கி, 'எப்போது நிறுத்தப் போகிறாய்!' என்று கேட்கும் அளவுக்கு வாழ்த்தியும் வசைபாடியும் வந்து குவிந்தன கடிதங்கள்