பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


20 விந்தன் 'பாலும் பாவையும் நாவலின் மூலம் விந்தனுக்கு கிடைத்த பாராட்டுக்களைவிட பாதிப்புகளே அதிகம். இந்த நாவலைப் படித்த சினிமாக்காரர்கள் விந்தனை எப்படியாவது சினிமாவுக்கு இழுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினர். விந்தனுக்கும் சினிமா மயக்கம் இருந்ததால் அந்த ஆசையில் அவர் கல்கியில் இருந்து விலகினார். சினிமாவுக்குப் போனார் விந்தன் ஏ.வி.எம்.மின் கதை இலாகாவில் சேர்ந்த விந்தனுக்கு அந்த நிறுவனம் எழுத்தாளனுக்குக் கொடுத்த ஊதியத்தை மதிப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்து அங்கிருந்து விலகினார். 1953-ஆம் ஆண்டு டி.ஆர். ராமண்ணாவின் அழைப்பின்பேரில் ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த, 'வாழப்பிறந்தவள்’ என்ற படத்துக்கு வசனம் எழுதினார். அதே ஆண்டில் எம்.நடேசன் தயாரித்த 'அன்பு என்ற படத்துக்கு கதை வசனம் எழுதியதோடு கருத்துள்ள ஒரு பாடலையும் எழுதினார். அன்பு ஒரு வெற்றிப் படமாக விந்தனுக்கு அமைந்தது. 1954-ஆம் ஆண்டு ஆர்.ஆர். பிகசர்ஸ் கூண்டுக்கிளி என்ற படத்துக்கு வசனம் எழுதியதோடு மூன்று பாடல்களையும் எழுதினார். "கொஞ்சுங் கிளியான பெண்ணை என்ற பாடல் மிகவும் புகழ் பெற்றது. எம்.ஜி. ராமச்சந்திரனும் சிவாஜி கணேசனும் இணைந்து நடித்த இப் படம் ஒரு திருப்புமுனை என்று சினிமா உலகில் பேசப்பட்டது. மூன்று படங்களுக்கு வசனம் எழுதிய விந்தனுக்கு கையில் கொஞ்சம் காசு புரண்டது, அவ்வளவு தான். சொந்தமாக 'மனிதன்' என்ற இதழை வெளியிட்டார். 1954 ஆகஸ்ட் மாதத்தில். மனிதன் பிறந்தான் விந்தனின் 'மனிதன் புதுமையும் புரட்சியும் இணைந்த பொன்னேடாக மலர்ந்தது. பக்கத்துக்குப் பக்கம் கருத்துக் குவியல் வாசகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. ஒன்பது இதழ்களே வெளி வந்த மனிதன் நின்று போனது விந்தனுக்கு பேரிழப்பாகும். மனிதனில் வெளிவந்த ஒவ்வொரு கட்டுரையும் மேல்தட்டு வர்க்கத்தின் கீழான குணங்களை வெளிப்படுத்தியது. மனிதனில் வெளிவந்த தெருவிளக்கு தொடர்கதை சினிமா உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டது. சினிமா உலகம் விந்தனை எதிரியாகப் பார்த்தது. எனினும் விந்தன் சினிமா உலகை கைவிடவில்லை. சில நண்பர்களின் துணையுடன் விந்தன் சொந்தமாக சினிமா கம்பெனி ஆரம்பித்து சிவாஜி கணேசன் பத்மினி ஆகியோரை நடிக்க வைத்தார். பின்னர் படம் நின்று விட்டது. சிறிது இடைவெளிக்குப் பின்னர் மணமாலை', 'சொல்லு தம்பி சொல்லு', 'பார்த்திபன் கனவு,