பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26 விந்தன் ஆக்கினைகளை மீறுவதற்கு மனிதன் சக்தியற்றவன் ஆகையால்தான் நமது நாட்டில் அவ்வப்போது தோன்றி மறைந்த மகான்கள் அன்பே ஆண்டவன் என்று கூறியிருக்கிறார்கள் வாழ்க்கையில் அன்புக்கு இடமில்லை என்றால் இன்பத்துக்கு இடம் ஏது?" (விந்தன் - மாட்டுத் தொழுவம்) அன்புள்ளத்தோடு மகளைப்போல மருமகளைப் பார்க்க வேண்டியவள் அதிகாரத்தோடு அவளை அடக்கி ஆள நினைக்கும் மாமியார். அம்மாவின் பேச்சை தட்டாமல் ஆமாம் சாமி போடும் கணவன், அண்ணியின் மேல் கோள் சொல்வதற்கு சந்தர்ப்பத்தை தேடிக் கொண்டிருக்கும் நாத்தனார் இவர்களுக்கு மத்தியில் வாழும் மருமகள் பிறந்த வீட்டில் பெற்றோர்களின் அன்பில் திளைத்து, ஆசைக் கனவுகளுடன் வளர்ந்தவள் புகுந்த வீட்டில் அன்பாகப் பேச ஆளின்றி, கடுமையான ஏசல்களுக்கு ஆளான கசப்பான உணர்வுகளை மென்றுமென்று விழுங்கி வாழ்க்கையே கசந்து ஜடமாய் ஒரு ஜந்துவாய் வாழ்ந்து வந்தாள் 'தினசரி என்னுடன் சண்டையிடுவதற்கு அவள்தான் எத்தனை சந்தர்ப்பங்களைச் சிருஷ்டி செய்து கொள்கிறாள் சந்தர்ப்பங்கள்ை நோக்கி நான்காத்திருக்க மாட்டேன் நானே வேண்டும்போது அவற்றைச் சிருஷ்டி செய்து கொள்வேன்' என்று சொன்ன வீராதிவீரன் நெப்போலியன் கூட இராஜ தந்திரத்தில் இவளிடத்தில் பிச்சை எடுக்க வேண்டும் போலிருக்கிறதே மாவீரன் நெப்போலியனுக்கு நிகரான மாமியார்கள் ராஜ்ஜியத்தில் புதுமலர்ச்சியே ஏற்படவில்லையா? இல்லை என்பதற்கு அடையாளம்தான் மனிதன் மாட்டோடு சேர்க்கப்படுகிறான் அதனால்தான் அவள் கேட்கிறாள், நான் வாழ்வது மனிதத் தொழுவமா? மாட்டுத் தொழுவமா? என்று 'அதனுடைய நிலைதான் என்னுடைய நிலையும் வீட்டுக் காரியங்களையே என்னால் இப்பொழுது செய்யமுடிவதில்லை பின் ஏன் வெட்டிச் சோறு?" ஆச்சு, மாடும் இப்பொழுது சினையாய்த்தான் இருக்கிறது நாளைக்கு அதைக் கிராமத்துக்கு ஒட்டி வைக்கப் போகிறார்கள் பெற்றுப் பிழைத்தால் திரும்பி வரும் செத்தொழிந்தால் வேறு மாடு வாங்கிக் கொள்வார்கள் நானும் நாளைக்குப் போகிறேன் பெற்றுப் பிழைத்தால் திரும்பி வருவேன் செத்தொழிந்தால் என்ன பிரமாதம் அவர் வேறு கல்யாணம் செய்து கொள்வார். இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள் நான் வாழ்வது மனிதத் தொழுவமா? இல்லை மாட்டுத் தொழுவமா? (மாட்டுத்தொழுவம்)