பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சிறு கதைகள் 27 ஏழை எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான விந்தன் ஐந்து ரூபாய் தண்டல் வாங்கி மாம்பழம் வியாபாரம் செய்யும் அம்மாயியின் கனவுகளைக் கற்பனைகளை யதார்த்தமாக சித்திரிக்கிறார் 'அந்தப் பழத்தை வாங்கி ஒரு பழம் ஓரணா என்று விற்றால்கூட ஒன்றேகால் ரூபாய் லாபம் கிடைக்கும் அங்கே நிற்காதே, இங்கே உட்காராதே என்று அடிக்கடி வந்து மிரட்டும் போலீஸ்காரன்களுக்கு நாலணா தண்டக் காசு அழுதாலும்கூட ஒரு ரூபாய் கட்டாயம் மிஞ்சும் ஊராரில் சிலர் தம் குழந்தைகளுக்கு பலூன் வாங்கி கொடுத்தாலும் கொடுத்து விடுகிறார்கள். அதைப் பார்த்து நம்ம குழந்தைகளும் தமக்கும் பலூன் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று மூன்று நாளாக ஒற்றை காலில் நிற்கின்றன நம்ம நிலைமை குழந்தைகளுக்கு எங்கே தெரிகிறது நாமும் எத்தனை நாளைக்குத்தான் அவற்றை ஏமாற்றிக் கொண்டு வருவது? இன்றைக்கு எப்படியாவது இரண்டனாவுக்கு இரண்டு பலூன்கள் வாங்கி குழந்தைக்கு கொடுத்திட வேண்டியதுதான் அப்புறம் மீதி நாலணா மிச்சம் இருக்கும் அந்த தருமராஜா நாயுடுவுக்கு அசலில் இரண்டரையனாவும் வட்டி ஒன்றே காலணாவும் கொடுத்து விடவேண்டும் கடைசியில் பத்தே காலணாதான் கடைசியில் மிச்சம் இருக்கும் அதிலும் வெற்றிலை பாக்கு புகையிலைக்கு ஓரணா போனால் பாக்கி ஒன்பதே காலணாதான் இது போதாதா ராத்திரி சாப்பாட்டுக்கு?” (தேற்றுவார் யார்?) படிக்காத பழக்காரியின் வரவு செலவு பட்ஜெட் கனவு பலித்ததா? இல்லையே? வியாபாரத்தில் அம்மாயி, "மனைவியை அடகு வைத்து காலகண்டய்யரின் கடனை அடைத்துவிட்ட அரிச்சந்திரனைப் போல் இருக்கிறாள். பின்னர் அரிச்சந்திரனைக் கைவிட்டு விடுகிறாள்! நகரத்தில் காலரா நோய் பரவி விட்டதால் அதைத் தடுக்க சுகாதார அதிகாரிகள் நகரைச் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள் ஒருநாள் அம்மாயியை மிரட்டி அவள் விற்றுக் கொண்டிருந்த பழக்கூடையை லாரியில் தூக்கிப் போட்டுக்கொண்டு போய் விட்டார்கள் அதோ, அம்மாயி தெருவில் தேம்பி தேம்பி அழுகிறாள் அவளைத் தேற்றுவார் யார்? இதுதான் அம்மாயி போன்ற ஆயிரம் ஆயிரம் ஏழைகளின் - அபலைகளின் அவலம் முற்போக்கு எழுத்தாளரான விந்தன் காதல் கதைகள் அதிகம் எழுதாதது போல் 'மறுமணம் போன்ற விஷயங்களிலும் அவருக்கு உடன்பாடு இல்லை என்றே தெரிகிறது