பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


32 விந்தன் வாய்மையையும் தூய்மையையும் பண்பையும், பாரம்பரியத்தையும் அங்கே வளர்த்துக் கொண்டிருந்தார்' சுற்றமும் நட்பும் 'குழந்தையைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டு பாலூட்டும் தன் தாய் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு மாற்றும் போது அது வீறிட்டு அழுகிறது. மீண்டும் தனக்கு பாலுட்டுவதற்காகத்தான் அன்னை அவ்வாறு செய்கிறாள் என்பதை அது அறிவதில்லை அந்தக் குழந்தையின் அழுகையைப் போன்றுதான் மனிதன் மரணத்தைக் கண்டு மனம் பதைப்பதும்' என்றார் கவியரசர் தாகூர். நண்பன் இறந்து விட்டான் துக்கம் விசாரிக்கப் போனேன். அங்கே . 'ஆமாம், என்ன அநியாயம் பாருங்கள். இன்னும் அவர் மறைந்துவிட்ட மாதிரியே எனக்குத் தெரியவில்லை. அடடா என்ன தங்கமான குணம் கேட்கும் போதெல்லாம் நூறும் இருநூறு மாகக் கொடுத்துக் கொண்டேயிருப்பார் இனிமேல் எனக்கு அவரைப்போல் யார் உதவி செய்யப் போகிறார்கள்?' என்றார் நண்பர் 'ஒரு விஷயம் கேளுங்கள். என்னிடம் அவர் எதைச் சொன்னாலும் மற்றவர்களைபோல் நான் அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்வதேயில்லை இல்லாத விதண்டா வாதம் எல்லாம் செய்வேன். அவர் கொஞ்சமாவது கோபித்துக் கொள்வார் என்கிறீர்களா? மாட்டவே மாட்டார். குலுங்கக் குலுங்கச் சிரித்துக் கொண்டே டேய் விநாயகம் உனக்கு வாதம் செய்வதில் நல்ல திறமை இருக்கிறது. நீ வக்கீல் வேலைக்குத்தான் படிக்க வேண்டும் என்பார் நானும் இப்பொழுது படிக்கும் பி. ஏ யை முடித்து அப்படியே படிக்கலாம் என்று எண்ணியிருந்தேன். என்னுடைய எண்ணத்தில் மண்ணைப் போட்டுவிட்டு அவர் போயே போய்விட்டார்” என்றார் மகன். 'ஐயோ, மஞ்சள் குங்குமத்தோடு போய்ச் சேரலாம்னு இருந்தேனே! என்னுடைய தலையெழுத்து இப்படி ஆகிவிட்டதே. இந்தப் பாவிக்குத் தலைவலி காய்ச்சல் என்றால் அவர் என்ன பாடுபடுத்துவார். அங்கேயும் இங்கேயுமாக குட்டி போட்ட பூனை மாதிரி ஒடி ஒடி வருவாரே இனிமேல் அப்படி யார் எனக்காக அலையப் போகிறார்கள்' என்றாள் மனைவி "என்ன இருந்தாலும் அந்தப் பாழும் தெய்வம் என்னை இப்படி அனாதையாக்கி விட்டிருக்க வேண்டாம் என்னமோ இத்தனை நாளும், என் கையைப் பிடித்தவர் என்னைப் பாடாய் படுத்திய போதெல்லாம் அண்ணா இருக்கிறார் என்று கொஞ்சம் தைரியமாய் இருந்தேன் இப்போது அதுவும் போய்விட்டது" என்றாள் தங்கை