பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34 விந்தன் உறவினர்களுக்கு விருந்து வைத்திருக்கிறேன் கடன் வாங்கியாவது விதவிதமான கறி வகைகளுடன பலகாரம் பட்சணங்களுடன் பரிமாறியிருக்கிறேன் அவர்களில் ஒருவராவது இதுவரை என் விருந்தை மெச்சி ஒரு வார்த்தை பேசியது கிடையாது ஆனால் இவனோ? கேவலம் தண்ணீர்விட்ட சாதத்தை இவ்வளவு பிரமாதப்படுத்தி எழுதியிருக்கிறானே? ஆமாம், வாழ்க்கையில் யாருமே தமக்கு மேற்பட்டவர்களை உபசரிப்பதற்கும், தமக்குக் கீழ்பட்டவர்களை உபசரிப்பதற்கும் உள்ள வித்தியாசம் இது' அவன் ஒரு கிறித்தவன் என்றும், தேசபக்தியை விலைக்கு விற்று விட்டு இந்திய விமானப் படையில் வேலையில் இருப்பதாகவும் கடிதத்தில் கண்டது பெண்ணைப் பெற்றவர் அவனைப் பற்றி எண்ணலானார் 'இப்போது மட்டும் என்ன? இந்த இந்து சமூகத்தில் இருந்து கொண்டு நாம் என்ன வாழ்ந்து விடப்போகிறோம்? வேண்டுமானால் ரங்காவையும் இன்னொரு இருமல்காரனாகப் பார்த்து கொடுக்கலாம் அவ்வளவுதான் அப்பப்பா யார் சொன்னாலும் சரி, முதல் இரண்டு பெண்களுககு நேர்ந்த கதி மட்டும் இந்தப் பெண்ணுக்கு நேரவே வேண்டாம் ஆண்டவனே. ஆமாம் அவளுடைய செளகரியத்துக்காக நாம் இந்த இந்து சமூகத்திற்கே ஒரு முழுக்குப் போட்டுவிட்டால் என்ன? அந்தப் பிள்ளையாண்டான் மட்டும் ஒப்புக் கொள்வதாயிருந்தால் நாமும் ரங்காவின் நலத்திற்காகக் கிறித்துவ மதத்தையே வேண்டு மானால் தழுவி விடலாமே!” 'அப்பா நீங்கள் சொல்வது சரி ஆனால் ஒன்று; பிரபலஸ்தர்களும், பிரமுகர்களும் கலப்பு கல்யாணம் செய்தால் அவர்களை சமூக முன்னேற்றத்துக்காகவும் சர்வ சமய சமரசத்திற் காகவும் அப்படிச் செய்வதாக புகழ்வார்கள் இது அவர்களுக்குச் சிறுமையளிப்பதற்கு பதிலாக பெருமையளிக்கும் ஆனால் நம்மைப்போன்ற ஏழைகள் செய்தாலோ அப்படிப் புகழ மாட்டார்கள் அப்பா கையாலாகாதவன் என்றும் கழுதைக் கெட்டால் குட்டிச் சுவர் என்றும் இகழ்வார்கள் அப்பா' 'அவர்கள் புகழ்ந்தாலும் புகழட்டும் இகழ்ந்தாலும் இகழட்டும் அம்மா அதைபற்றி எனக்குக் கவலையில்லை எப்படியாவது நீ சுகமாகயிருந்தால் அதுவே போதும் எனக்கு வ்ேடுமானால் நீ கலப்பு மணம் செயது கொள்ள வேண்டாமே அந்தப் பிள்ளையாண்டனும் பிறக்கும்போதே கிறுத்துவனாகப் பிறந்துவிடவில்லையாம் நடுவிலதான் மாறினானாம் அவனுடைய மதத்தை நாமும் தழுவி விடுவோமே? நீதான் நேரில் பார்த்திருக்கிறாயே, உனக்கு அவனைப் பிடிததிருககிறதோ இல்லையோ?"