பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36 விந்தன் கண்டதைக் கதையாக்காமல், பணத்தின் மேலும் பாராட்டின் மேலும் கடைக்கண்ணை ஒட்டுபவர்களும் பலர், பொருளாதார பிரச்சனையா? அதைபற்றி எழுதுவது பிரச்சாரமன்றோ? என்று தீண்டாமை பாராட்டும் பெருமக்களும் பலர் உண்டு விந்தனின் கதைகள் புதிய சமூகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் பல்வேறு வடிவங்கள் நிலவிவரும் சீர் கேடுகளை உடன்வைத்துக் கொண்டே நாகரிக வாழ்வு வாழ்வதாகப் பேசி வரும் பெரிய மனிதர்களின் கூட்டத்தில் தைரியமாக எழுந்து நின்று, 'நீங்கள் வாழ்வது நாகரிகத்தின் மேலல்ல நரகத்தின் மேல்!" என்று இடித்துரைக்கும் சொற்கணைகளே விந்தன் கதைகள் ஆனால் டாக்டர் மு. வ கூறியுள்ளதுபோல் 'விந்தன் படைக்கும் பாத்திரங்கள் பெரும்பாலும் அப்பாவிகளே. ஆயினும் அவர்களைப் பற்றிப் படிக்கும் மனங்கள் புரட்சி மனங்களாகவே மாறுகின்றன இந்த அப்பாவிகளில் ஒருவர்தான் வாத்தியார் வைத்தியலிங்கம் அவரைப் படம் பிடிப்பதுதான் ஆபீசாப்பியாசம் (டாக்டர் சாலை இளந்திரையன் சிறுகதைச் செல்வம்) 'கோயிலுக்குக் கோயில் நின்று தொழுது சென்ற வாத்தியார் பூலோகத்தில் நரகத்தைக் கண்டார், தொழாமலே சென்றவர்களோ சொர்க்கத்தைக் கண்டார்கள்' (விந்தன்) மனிதனுக்குப் படிப்பைச் சொல்லிக் கொடுத்து அவன் அறிவை, பண்பை வளர்த்த வாத்தியார் வைத்தியலிங்கம், பொருளாதார ரீதியில் பெருத்த தோல்வியைக் கண்டார். அதனாலேயே இந்தச் சமூகத்துக்குப் பாடம் புகட்ட சவால் விட நினைத்தார் அதன் பலன் தான் தன் மகனுக்கு 'அட்சாரப்பியாசம் செய்து வைக்காமல் ஆபீசாப்பியாசம் செய்து வைத்தார் 'பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற வாசகத்தை வாத்தியார் கற்காதவரா? அவர் படித்ததனைத்தும் அவர் பசியைப் போக்க வில்லையே அதனால்தான் அவர் தம் மகனுக்கு ஆபீஸ்ாப்பியாசம் செய்து வைத்தார் பதினைந்து ரூபாய் சம்பளத்தில் பதினாறு மணி நேரம் வேலை, இப்படி ஒரு வருஷமா இரண்டு வருஷமா, முழுதாக முப்பது வருஷம் வேலை பார்த்தார் மாணிக்கம், கதிர்வேல் நாடார் கடையில் மாணிக்கத்தின் வாழ்க்கை முழுவதும் கடையிலேயே கழிந்து விட்டது ஒருநாள் நாடார் சக்கையாகி விட்ட மாணிக்கத்தை வீட்டுக்கு அனுப்பி விட்டார் ஏதாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்த மாணிக்கத்திடம் நாடார் "இத்தனை நாள் உனக்கு வேலை கொடுத்ததற்கு நீதான் எனக்கு ஏதாவது கொடுக்கணும்' என்று சொல்லிவிட்டார்