பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சிறு கதைகள் 39 கன்னத்தில் அறைந்து கீழே தள்ளினாா சிறுமியும் கோபத்துடன் கஞ்சியை அவர் முகத்தில் ஊற்றாமல கீழே ஊற்றினாள அதைப் பார்த்துக கொண்டிருந்த அந்த இருவர் அதான் நாளை நமமுடையது என தாங்கள் வரிசையில் நின்று வாங்கிய கஞ்சியை அந்த சிறுமிககும் அவள தாயக்கும் கொடுத்து விட்டு இன்று ஐந்தாவது நாள பட்டினி என்றான் கவலைப்படாதே நாளை நம்முடையது எனறான் 'கூடாது நண்பா கூடாது நாளை அவர்களுடையதாக இருக்கட்டும் இன்றை நம்முடையதாக்கிக் கொள்வோம் இந்த உறுதிமொழியைக் கேட்டதும் அநதச் சிறுமியின் கண்களில் ஒளி வீசியது. இந்தச் சமூகத்தின் போக்குகளை மறந்து நாளை நம்முடையது என்று கண்மூடிக் கிடந்த மக்களை இன்றே நம்முடையது என்று உணர வைத்தன கந்தையாவின் சமூக விரோதப போக்குகள் 'என் கடன் பணி செய்வதே' என்று மக்கள் முன் கூறி, நகரத்தில் நடந்துள்ள பல சாதனைகளுக்குச் சொநதக்காரர். இதோ பட்டியல் 'ஏகாம்பரம் எம்போரியம் 'ஏகாம்பரம் ஜூவல்லர்ஸ் 'ஏகாம்பரம் மருந்துகடை ஏகாம்பரம் பவனம் இவையெல்லாம் அடையாளம் காட்ட 'என் கடன் பணி செய்வதே' என்ற விளம்பரப் பலகை தொங்கும் அரசியல் அந்தஸ்து ஒரு மனிதனை எப்படியெல்லாம் உயர்த்தும என்பதை அமைதியாகக் கதை சொல்லுகிறார் விந்தன் ஆனால் டாக்டர் மு. வ சொன்னது போல “இக் கதையைப் படிக்கிற மனங்கள் தான் புரட்சி மனங்களாக மாறுகின்றன.' இதோ ஒரு சுயமரியாதைக்காரர்! விந்தன் வெளியிட்ட மனிதன் இதழில் வெளியான இதோ ஒரு சுயமரியாதைக்காரர்' என்ற பகுதியைப் பலரும் பாராட்டினார்கள் அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர் கல்கி, அவர் எழுதினார் 'இதோ ஒரு சுயமரியாதைக்காரர்' என்னும் தலைப்பை உடைய பகுதி பத்திரிகை உலகத்துக்கே ஒரு புதுமை என்று சொல்லும்படி இருக்கிறது இளம் பிராயத்தில் ஒரு காலை இழந்துவிட்ட ஒரு மனிதர் வாழ்க்கையில் நிராசை அடைந்து விடாமலும், பிறரை அண்டிப் பிழைக்காமலும் சுயமாகத் தொழில் செய்து சுயமரியாதையை நிலை நாட்டிக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார் இந்த உண்மை வாழ்க்கைக் குறிப்பு மிக்க உயர்தரமான பத்திரிகை அம்சமாகும், மனிதகுலத்தை எப்படி உயர்த்தலாம் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும் (1 10 1954 கல்கி)