பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சிறு கதைகள் 41 அந்தத் தத்துவத்தில் தலைசாய்ந்து கிடக்கும் மக்கள் எதற்கெடுத்தாலும் தலையெழுத்து என்று சொல்லித் தப்பித்துக் கொள்கிறார்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வேண்டாமா? வேண்டுமெனில் ஐந்து ரூபாயக்கு விற்க வேண்டிய மீனை மூன்று ரூபாய்க்குக் கொடுக்காதீர்கள் முன் பணம் கொடுத்து உங்களை முடக்கி விட்ட முதலாளியின் முகத்தில் பணத்தை வீசியெறியுங்கள் பின்னர் சுதந்திரமாக மீன் வியாபாரம் செய்யுங்கள் கூட்டுறவு சங்கங்களைக் கட்டுங்கள் அப்போது தேடுங்கள் உழைக்காமல் உண்டு கொழுத்து உல்லாசமாக வாழும் நைனா முகம்மதுவின் தலையெழுத்து எப்படி இருக்கிறது என்று? அப்போது புரியும் தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்பதை இந்தக் கதையைப் படித்தபோது (தலையெழுத்து) எழுந்த சிந்தனை இது ஒன்றே குலம் 'ஒன்றே குலம் எழுத்தில் உள்ளதை நிஜ வாழ்க்கையிலும் நிரூபித்து காட்டினார் தர்மலிங்கம். தர்மலிங்கம் தன் ஜாதிக்காரன் என்ற தைரியத்தில் அவன் வீட்டுத் திண்ணையில் இடம் கேட்டான் பொன்னையா. தர்மலிங்கம் மனைவியின் ஆலோசனைப்படி ஐம்பது ரூபாய் கொடுத்துக் குடிசையைப் புதிப்பிக்குமாறு சொன்னான். ஐம்பது ரூபாய் கையில் கிடைத்தவுடன் அகமகிழ்ந்து போனார்கள், பொன்னையனும் அவன் மனைவியும் ஆனால் பணத்தின் மறுபக்கத்தை அவர்கள் மறந்து போனார்கள் ஏழை என்றும் ஏழையாகவே குடிசையில் இருக்கவேண்டும், பணக்காரன் என்றும் பணக்காரனாகவே மாடமாளிகையில் வாழ வேண்டும் என்பதே அதன் அர்த்தம் என்பது ஏழை பொன்னையாவுக்கு எப்படித் தெரியும்? (பொன்னையா) பொதுமை மலர்ந்தது “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்று புரட்சி குரல் கொடுக்காமல், 'நீங்கள் சாகப் பிறந்தவர்கள் அல்ல, வாழப் பிறந்தவர்கள் இங்குள்ள தோட்டம் துறவுகள் அனைத்தும் இங்கு வேலை செய்பவர்கள் அனைவருக்கும் சொந்தம் என்று இளையதலை முறையைச் சேர்ந்த இளைஞன் சொன்னபோது, முந்தைய தலை முறையைச் சேர்ந்த அவன் அப்பா வேலைக்காரர்களுக்கு இழைத்த இன்னல்கள், கொடுமைகள், அவமானங்கள் அனைத்தும் மறந்து போகின்றன