பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மான் இறந்து விடடதை அறிந்த அரசன் அன்பின் மகிமையை வியந்து கவியிடம் மணடியிட்டு மன்னிக்கும்படி வேண்டுகிறான் அலலா உன்னை ஒரு நாளும் மன்னிக்கமாட்டார் என்கிறான் மனம் நெகிழும்படியான இக் கதையை உணர்ச்சி பூர்வமான உரையாடல்கள் மூலமும் முஸ்லிம் சமுதாயத்தின் மொழியாலும் சிறப்பாக எழுதியுள்ளார் சிறுகதைகளைக் கேலியும் கிண்டலும் கலந்த நடையில் படைக்கும் படைப்பாளரான விந்தன் முழமையான நகைச்சுவைக் கதைகளையும் எழுதியுள்ளார் சான்றுக்கு ஒரு கதை கவிதைத் துறையில் கவிதைகள் எழுதி தம்மை கவிஞர் என்று அடையாளப்படுத்தி கொள்வதற்கு மாறாக, தாகூர் மாதிரி தாடி வளர்த்துக் கொள்வது, குர்தா அணிவது. இப்படி உடையால் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட கவிஞர் ஒன்பாற்சுவையாரை எவரும் கவிஞர் என்று அழைக்கவில்லை அதுவே அவருக்கு கெளரவக் குறைவாகப்பட்டது 'நமக்குத் தொழில் கவிதை என்று அவரே முழுநேரக் கவிஞராக ஆகிவிட்டார் ஆனால் காசுதான் அவரை நெருங்கவில்லை. கவிஞருக்கு கவிதை பிறந்ததோ இல்லையோ கவிதாதேவி என்னும் பெண்குழந்தை பிறந்தது கவிஞர் ஒன்பாற்சுவையாரின் இல்லத்தரசி இன்பவல்லி அம்மையார் இட்லி வடை கடையை நடத்தி வாழ்க்கைக்குக் காசு வேண்டும் என்ற எண்ணத்தில் நடத்தினார் இட்லி கிடைத்ததும் சட்னி கிடைக்காததால் ஆத்திரத்தில் கவிஞர் பாடினார். வேதனை வேதனை வேதனை வேதனை போயின் சோதனை சோதனை சோதனை இட்லி இட்லி இட்லிக்கும் வேண்டும் சட்னி சட்னி சட்னி அச் சமயத்தில் வீட்டு வாசலில் கார் ஒன்று நின்றது. அதிலிருந்து இறங்கியவர் ஐநூறு ரூபாய்க்கு செக் ஒன்றை எழுதி கவிஞர் ஒன்பாற்சுவையாரிடம் கொடுத்துவிட்டு நாளை ஸ்டுடியோவுக்கு வரும்படி சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். அவ்வளவுதான் ஒன்பாற்சுவையார் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார் மறுநாள் ஸ்டுடியோவிற்குச் சென்றார் அங்கே உம்மை பாட்டு எழுத அழைக்கவில்லை பின்னணி பாடத்தான் அழைத்தோம் என்று