பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சிறு கதைகள் 49 வீடு திரும்புகிறான் வயதாகிவிட்டது என்று அனுப்புகிறான். பலநாள் அப்பாவைக் காணத்துடித்துக் கொண்டு இருந்த குழந்தை, தாடி மீசையுடன் அப்பாவைக் கண்டவுடன் அலறி அழுதுகொண்டு 'அம்மா! பூச்சாண்டி' என்று ஓடுகிறது. இத்தகைய முதலாளித்துவ சுயரூபத்தை விந்தன் கதைகளில்தான் காணமுடியும் சோற்றுக்கு நாயுடன் போராடும் சோலையப்பனை சுதந்தரமாக வாழ விடப்படுகிறது. ஆனால் சாதிப் பேய் விரட்டுகிறது. தற்கொலை செய்து கொள்ளும் அந்த ஒரே உரிமை கூட அவனுக்கு இல்லையென்பதை விந்தன் கதைதான் சொல்லுகிறது. கள்ளச் சாராயம் காய்ச்சும் தன் தந்தையைக் காட்டி கொடுக்கும் புஷ்பராஜ் 'அவர் எனக்கு விரோதியில்லை!" "பின்னே யாருக்கு தம்பி விரோதி' "சமுதாயத்துக்கு விரோதி" "சொந்த அப்பாவைவிட சமுதாயம் பெரிதா?” 'அப்பாவைவிட அரசாங்கத்தைவிடப் பெரிசு' இத்தகைய உரையாடலை விந்தன் கதையில்தான் காணமுடியும் 'மனைவியை அடகு வைத்து காலகண்டய்யரின் கடனை அடைத்துவிட்ட அரிசந்திரனைப் பின்பற்றி வியாபாரம் செய்த அம்மாயி கடைசியில் தன் முதலை இழந்து தெருவில் தேம்பி அழும் அம்மாயியைத் தேற்றுவார் யார்? இத்தகைய அம்மாயின் அழுகுரலை விந்தனின் கதைகளில்தான் கேட்க முடியும். 'சந்தர்ப்பங்களை நோக்கி நான் காத்திருக்கமாட்டேன்; நானே வேண்டும்போது அவற்றைச் சிருஷ்டி செய்துக் கொள்வேன்' என்று வீராதி வீரன் நெப்போலியன் போல் முழக்கிடும் மாமியாரிடையே வாழும் மருமகள் பேசும் பேச்சை விந்தன் கதையில் கேட்க முடியும் 'மாடு இப்போது சினையாய்த்தான் இருக்கிறது நாளைக்குக் கிராமத்துக்குப் போகும் பெத்து பிழைத்தால் வீடு திரும்பும். இல்லையென்றால் வேறு மாடு வாங்கிக் கொள்வார்கள். நாளைக்கு நானும் தாய் வீட்டுக்கப் போகிறேன். பெத்து பிழைத்தால் வீடு திரும்புவேன் இல்லாவிட்டால் என்ன வேறு கல்யாணம் செய்து கொள்வார் 'இப்போதும் நீங்களே சொல்லுங்கள் நான் வாழ்வது மனிதத் தொழுவமா அல்லது மாட்டுத் தொழுவமா?" இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி எழுதுவதற்கு பலர் அஞ்சிய போது, விந்தன் "அய்யோ பொய்யும் புரட்டும் இல்லாத லோ