பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


52 விந்தன் இத்தகைய நோக்கும் போக்கும் விந்தனுக்குத் தொடக்க காலத்திலிருந்தே அவர் மனத்தில் அழுத்தமாக இருந்ததனால்தான் சுதந்திரத்திற்கப் பின்னால் நாட்டில் ஏற்பட்ட மாறுதல்களும், புதுமலர்ச்சிகளும் விந்தனுக்கு மயக்கத்தையோ, மருட்சியையோ தராமல் மறு சிந்தனையை எரிமலைபோல் உண்டாக்கின. சிறுகதைகளில் பலரின் முகமூடியை கலைத்து வீதியல் நிறுத்திக் குற்றவாளிகளாக அறிமுகப்படுத்திய விந்தன், முதன் முதலில் நாவல் எழுத முனைந்தபோது நக்கீரனாக மாறிப் பேராசிரியர் 'கல்கி'யின் முன்னால் குற்றவாளியாக நின்றார் என்பதெல்லாம் வேதனைக்குரிய நிகழ்ச்சியே! எந்தவிதமான அரசியலுக்கும் அப்பாற்பட்ட இலக்கியவாதியான விந்தன், ஒரு பேரியக்கத்தின் பெயரால் நடைபெற்ற மோசடிகளைக் காணப் பொறுக்காமல் அந்தப் பேரியக்கத்திற்குப் பெருமை தேடும் வகையில் தவறுகளைச் சுட்டிக்காட்ட அரசியல் தொடர்பான நாவலை எழுதத் துணிந்தார். 'கண் திறக்குமா? என்னும் இந் நாவலை அக் காலத்தில் காங்கிரசு சார்பு பத்திரிகையாக இருந்த 'கல்கி' இதழில் எழுதத் தயங்கிச் சுயமரியாதைக் கருத்துகளைப் பரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட 'பொன்னி’ இதழில் நக்கீரன் என்றும் பெயரில் எழுதினார். இந்த இதழின் ஆசிரியராக இருந்த காலஞ்சென்ற முருகு சுப்பிரமணியம் அவர்களே விந்தனின் புதுச் சிந்தனையைக் கை நீட்டி வரவேற்ற முதல் புதுமலர்ச்சி பத்திரிகையாளர் ஆவார். இவருக்கு நன்றி உணர்வுடன் கண் திறக்குமா? நாவல் நூலாக வெளிவந்தபோது காணிக்கை ஆக்கியுள்ளார் விந்தன். கதைச் சுருக்கம் 'தவறுகளை வெளியே நிறுத்திக் கதவைத் தாளிடுவாயானால், உண்மையும் வெளியே நின்றுவிடும்' என்னும் மகாகவி தாகூரின் மணிவாசகத்தோடு தொடங்குகிறது இந்நாவல். தேசத்தின் விடுதலைக்காக நடைபெற்றப் போராட்டத்தில் கலந்துகொண்டு தடியடி பட்டு இரத்தம் சிந்தி சிறை புகுந்து, தாய் தங்கையைப் பிரிந்து நம்மிடம் இருந்ததையெல்லாம் இழந்து அனாதையாக நிற்கும் செல்வம், போலியான அரசியலும் பொய்யான தத்துவங்களும் நாட்டில் வரவேற்கப்படுவதைக் கண்டு வேதனையுற்றுக் கடைசியில் பொய்யெல்லாம் மெய்யென்றும், போலியெல்லாம் அசல் என்றும் நம்பி அதற்குத் தம்மையே ஈடுபடுத்திக்கொள்ளும் அவலம் ஒரு பக்கம்.