பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ந்ாவல்கள் 53 நாட்டில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்களைக் கலகங்கள் என்றும், காத்தியைக் கலகக்காரன்' என்றும் பச்சையாகப் பேசிவரும் பாரிஸ்டர் பரந்தாமனார் ஒரு நாள் திடீரென்று தியாகி'யாக அவதாரம் எடுத்து, விக்டோரியா பவனமாக இருந்த தம் இல்லத்தைக் காந்தி பவன'மாக மாற்றிக் காந்தி பக்தர்களை யெல்லாம் தம் முன் வாய்பொத்திக் கைகட்டி நிற்கும்படிச் செய்யும் அற்புதம் மற்றொரு பக்கம் ஏழை எளிய பெண்களின் கற்பைச் சூறையாடிய கயவன் சிவகுமார் ஒருநாள் வீராங்கனை ஒருத்தியால் கொலை செய்யப்பட்ட போதிலும், சிவகுமார் இந்தத் தேசத்தின் விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்தான் என்று போகுமிடமெல்லாம் பொறி பறக்கப் பேசி, செத்தவனுக்குச் சிலை வைத்துத் தன் மகனைத் தியாகி'யாக்கிய தியாகச் செம்மல், குணத்தாலும் கொள்கையாலும் ஒன்றுபட்ட பாரிஸ்டர் பரந்தாமனாரின் நண்பர் குற்றாலலிங்கத்தின் அறப்போர்கள் பிரிதொரு பக்கம்! இத்தகைய போக்குகளுடன் ஒத்துப்போக முடியாமலும், ஒதுங்கி நிற்க முடியாமலும், உறவுகளால் பிணைக்கப்பட்ட பாரிஸ்டர் பரந்தாமனாரின் ஒரே மகள், மருத்துவக் கல்லூரி மாணவியான சாந்தினி, தன் தந்தையிடம் பயிற்சிபெறும் செல்வத்தை, போராட்ட உணர்வுமிக்க காந்தியவாதியான இளைஞனை, விரும்புகிறாள். அதன் பொருட்டே அவன் போராட்டத்தில் ஈடுபட்டுத் தடியடிபட்டு இரத்தம் சிந்தி மருத்துவமனையில் துடித்துக் கொண்டிருந்தபோது, அவனைக் கண்டு அனுதாபப்படுகிறாள். அதோடு அவன் சகோதரி சித்ராவுக்குத் துணையாகவும் இருக்கிறாள். இறுதியில்... இவளும் பாரிஸ்டர் பரந்தாமனாரின் கோஷ்டியில் சேர்ந்து விடுகிறாள் - நரிக்கு நரிதான் பிறக்கும் என்று நம்பும்படியாக இந்த நரிக்கூட்டத்தில் நல்லமணம் படைத்த இளைஞர்களான பாலுவும், கண்ணனும் புரட்சிச் சிந்தனையுடையவர்கள். பிராமண சமூகத்தில் பிறந்த பாலு பூணுலை அறுத்தெறிகிறான்; தன் தந்தையின் காதலியான கீழ்சாதிப் பெண்ணைச் சிற்றன்னையாகவும் ஏற்றுக் கொள்கிறான். அத்துடன் தங்கை செங்கமலத்தை ஏமாற்றிய சிவகுமாரனைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருப்பவனுக்கு, முடிவு வேறு விதமாக மாறுகிறபோது சித்தம் கலங்கித் திரிகிறான். சிவகுமாரனின் லீலைகளுக்குப் பயந்து ஓடிவரும் சித்ராவைக் கதராடை அணிந்த கண்ணன் ஆதரிக்கிறான். எனினும் கண்ணனின் கதராடை சித்ராவுக்கு அச்சத்தை உண்டாக்குகிறது. இறுதியில் உண்மைக்கும் தியாகத்துக்கும் பெயர் பெற்ற கதரைப் போலவே கண்ணணையும் நம்பித் திருமணம் செய்து கொள்கிறாள்.