பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


54 விந்தன் சிவகுமாரனின் ஆசைக்கு இரையாகிக் கையில் குழந்தையுடன் ஆதரவற்று நிற்கும் செங்கமலம், அவனை நிறைவாகவே நினைக்கிறாள்; நெஞ்சத்தில் வைத்துப் போற்றுகிறாள் ஒரு நாள் சிவகுமாரனை ஒருத்தி கொலை செய்து விட்டாள் என்ற செய்தியைக் கேட்டு மறுகணமே செங்கமலம் தற்கொலை செய்து கொள்கிறாள். இவ்வாறு காந்தியின் பேரால், பணத்தின் பேரால், சாதியின் பேரால் நடைபெறும் கொடுமைகளை மோசடிகளைக் கண்டும் காணாமல் கண்மூடிக் கிடக்கும் சமூகமே. 'உன் கண் திறக்குமா? என்று கேட்கிறது இந் நாவல்! திறனாய்வு 'எதை எழுதினாலும் அதில் உயிர் இருக்க வேண்டும்; உணர்ச்சி இருக்க வேண்டும் என்பது, நான் எழுத ஆரம்பித்தபோதே எடுத்துக் கொண்ட பிரதிக்ஞை. இவையிரண்டும் இல்லாமல் எழுதுவதில்தான் என்ன பயன்? படிப்பதில் தான் என்ன பயன்?" 'நாவல் பிறக்கிறது என்னும் கட்டுரையில் இவ்வாறு கேள்வி எழுப்பும் விந்தன், தம் முதல் நாவலான இக்கதையை மிகவும் உணர்ச்சியோடும் உயிர்த் துடிப்போடும் எழுதியுள்ளார். பொதுவாக இத்தகைய நாவல்களைப் படைக்க முனைகின்ற படைப்பாளிகள் ஏதேனும் ஓர் அரசியல் இயக்கத்தோடு சார்ந்து நின்று, தம் எதிர்ப்பு உணர்ச்சிகளை எழுதிக் குவித்து, வாசகனைத் தம் இயக்கத்திற்குத் தோழனாகவும் தொண்டனாகவும் வேஷம் போடும்படி துண்டுவார்கள். ஆனால், இந் நாவலாசிரியரோ அரசியலுக்கு அப்பாற்பட்ட பொதுநோக்குடைய முற்போக்குவாதி; தேசத்தில் எல்லோரும் சமத்துவமாகவும், சகோதரத்துவமாகவும் வாழவேண்டு மென்று மெய்யாக நம்பிய மனிதாபிமானி, பாதிப்புகளைக் கண்டு அஞ்சாத படைப்பாளி இத்தகையச் சார்புகளோடு இந்நாவல் எழுதப்பட்ட போதிலும் வெளிவந்த காலமும், வெளியிட்ட பத்திரிகையின் போக்கும் விந்தன் ஓர் அரசியல் சார்புடைய எழுத்தாளர் என்கிற எண்ணத்தை மக்கள் மத்தியில் பரப்பின இந்நாவல் வெளிவந்த 1948-49-ஆம் ஆண்டு தமிழ்நாட்டு அரசியலில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலம். ஒரு பக்கத்தில் பொதுவுடைமை இயக்கம், முதல் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் ஆட்சியை எதிர்த்துப் போராட்டங்களைத் தொடங்கிபோது, அந்த இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்களையும், தொண்டர்களையும் பலவகையில் துன்புறுத்திச் சொத்துகளைச் சூறையாடி, இந்தத் தேசத்தின்