பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நாவல்கள் 57 உயர்கல்வி மட்டங்களில் நடைபெறும் சிற்சில ஆராய்ச்சிகளிற் காணப்படும் - செல்வாக்குகளுக்கு ஆட்படாத ஒரு விமர்சன நூல் என்ற வகையில் இந்த நூலின் ஆசிரியர்களின் கவனத்தைப் 'பாலும் பாவையும் ஈர்க்க ஏன் தவறியது என்பது ஒரு முக்கியமான வினாவாகும். கல்கி கிருஷ்ணமூர்த்தி காலத்திலும் அவருக்குப் பிந்திய காலத்திலும் ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் எழுதிய பல்வேறு ஜனரஞ்சக எழுத்தாளர்கள் பத்தோடு பதினொன்றாக எண்ணப்படும் அளவுக்கு மாத்திரமே இலக்கிய மதிப்பு உள்ள ஆசிரியரா விந்தன்? என்னும் வினா தவிர்க்க முடியாதபடி எழுகின்றது. விந்தனுக்கு நிலைத்தப் புகழைத்தேடிக் கொடுத்ததே 'பாலும் பாவையும் தான் என்று கூறப்படுவதுண்டு. கல்கியில் தொடர் கதையாக வெளிவந்து பின் நூலாக வெளிவந்த இந் நாவல் 1968 ஜூலைக்கு முன் ஒன்பது பதிப்புகள் பெற்றிருந்தது. 1969-க்கு முன்னரே கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. தமிழ் நாவலின் நூற்றாண்டு வளர்ச்சியில் முக்கியமானவர்கள் என்று தாம் கருதிய இலக்கிய ஆர்வலர்களுக்கு அதுவரை தெரியாதிருந்த பலரை எடுத்துக் கூறிய சிடடி, சிவபாதசுந்தரம் ஆகிய இருவரும் விந்தனை, அதுவும் அவர்கள் மிகவும் போற்றும் கல்கியால் சிறப்பாகப் பாராட்டப் பெற்றவர், காட்டாமல் மறைப்பது என்பது சுவாரசியமான ஒரு வினாவாகும். (தற்கால தமிழ் இலக்கியத்தில் விந்தன் பெறும் இடம் விந்தனும் விமர்சனமும் 1982) எழுத்தாளர் அகிலன் சொன்னார் பாலும் பாவையும் என்ற நாவலின் வாயிலாகத் தமிழ் வாசகர் உலகையே வியப்புறச் செய்து யார் இந்த விந்தன்?' என்று கேட்க வைத்த நாவல் அது. கதையின் கருப்பொருள், எழுத்து, நடை, உருவம் எல்லாவற்றிலும் ஒரு புதுமை தெரிந்தது. அந்த நாவலின் இலக்கியப் படைப்புக்கு வேண்டிய உயிர்த் துடிப்புகள் காண்ப்பட்டன" (விந்தனும் விமர்சனமும், 64-65) இவரைப் போலவே வல்லிக்கண்ணன் எழுதுகிறார்: "இந்தக் கதையை விந்தன் வளர்த்திருக்கிற விதம் புதுமையானது; கதை மாந்தரை அறிமுகப்படுத்துகிற வகை புதுமையானது, அவர்களைப் பழக விட்டு, உரையாட வைக்கிற போக்கு ரசமானது, சுவையானது. இடைஇடையே அவர் சுட்டிக் காட்டுகிற உண்மைகள் சிந்தனைக்கு உணவு அங்கங்கே அவர் பொறித்துள்ள சிந்தனை மணிகள், அறிவின் அனுபவத்தின் ஒளிச்சுடர்கள்' (விந்தனும் விமர்சனமும் 46-47) இவ்வாறு பலரும் புகழ்ந்தனர். தமிழ்ப்புதின உலகில் இருந்திருப்பதைத் தெரிந்தனர்.