பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


58 விந்தன் இவர்களைப் போலவே திரைப்படத் துறையைச் சேர்ந்த சிலர் இந் நாவல் புரட்சிகரமான கருத்துடைய புதுமையான நாவல்' என்று பாராட்டியதோடு விந்தனையும் சினிமா உலகிற்கும் அழைத்துப் போனார்கள். சினிமாவில் விந்தனுக்குப் புகழோடு பணமும் கிடைத்தது. அந்தப் பணமும், அவருக்கு ஒரு முதலாளித்துவ மனநிலையை உண்டாக்காமல் பரந்து பட்ட இந்தச் சமூகத்தைப் பார்க்கவும், புதிய புதிய அனுபவங்களைப் பெறவும் வாய்ப்பளித்தது. தன் எழுத்தின் வன்மையையும் திண்மையும் அவர் உணர்ந்தார். ஆம், அந்தப் பணம் மனிதன் என்னும் பத்திரிகையைச் சொந்தமாக நடத்துவதற்கும், அவ்வாறு நடத்தியதின் மூலம் தொல்லை களைத் தோல்விகளை அனுபவிப்பதற்கும் தூண்டுதலாக இருந்தது இதன் பிறகு விந்தனுக்கு இலக்கியம் பிறக்கவில்லை; பெரு மூச்சுத்தான் பிறந்தது விந்தனை இத்தகைய சோதனைகளுக்கு ஆளாக்கிய பாலும் பாவையும் கதையின் தோற்றமே ஒரு சோகக்கதையாகும். அதை ஆசிரியரே கூறுகிறார்: "ஒருநாள் அமரர் கல்கி அவர்கள் என்னைத் தம் வீட்டுக்கு வருமாறு பணித்தார்கள்: சென்றேன், கையில் திறந்த பத்திரிகை யொன்றை வைத்துக் கொண்டு ஏதோ யோசித்த வண்ணம் அப்படியும் இப்படியுமாகத் தம் அறையில் அவர்கள் நடைபோட்டுக் கொண்டிருந்தார்கள் “அழைத்தீர்களாமே?" என்றேன். 'கல்கி காரியாலயத்தில் வேலை பார்க்கும் நீங்கள் வேறெந்தப் பத்திரிகைக்கும் கதையோ, கட்டுரையோ எழுதக் கூடாது என்ற விஷயம் உங்களுக்குத் தெரியாதா?' என்று தமக்கே உரித்தான கம்பீரத்துடன் அவர்கள் கேட்டார்கள். 'தெரியும்' என்றேன் நான். 'சரி இந்தப் பத்திரிகையில் வெளியாகியிருக்கும் தொடர் கதை யாருடைய தொடர்கதை?” 'தெரியாது' 'உங்களுடைய தொடர்கதை என்று பலர் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்களே, அதற்கு என்ன சொல்லுகிறீர்கள்?" "அவர்கள் ஒரு வேளை என்னுடைய விரோதிகளாயிருக்கலாம்' இல்லை; உங்களுடைய அபிமானிகள்தாம் அப்படி எழுதியிருக் கிறார்கள். அத்துடன் கல்கி'யில் ஏன் அவர் தொடர் கதை எழுதக் கூடாது என்றும் கேட்டிருக்கிறார்கள்'