பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


60 விந்தன் கலைஞானபுரத்தில் நடைபெற விருக்கும் அகஸ்தியர் விழாவிற்குச் சில புத்தகங்களுடன் போகிறான் கலைஞானபுரத்தில் விடுதி ஒன்றில் தங்க நேர்ந்தபோது, இந்திரன் என்பவனால் காதலித்துக் கைவிடப்பட்ட அகல்யா என்கிற பெண்ணைச் சந்திக்கிறான், அவள் கதையைக் கேட்டு அனுதாப்ப்படுகிறான் அந்த அனுதாபத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட அந்தப் பெண், 'அந்தக் காதகன் " கடவுள் உன்னைக் காப்பாற்றட்டும்' என்று கடவுளை எனக்குத் துணையாக்கி விட்டுக் கம்பி நீட்டி விட்டான் 'நீங்கள்தான் நான் கண்ட முதல் கடவுள் இனி நீங்கள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்' என்று வெறும் பேச்சோடு நில்லாமல், ஒவ்வொரு நிமிசமும் குழைந்து குழைந்து பேசி, குமுறிக் குமுறி அழுது, வெடிக்க வெடிக்கத் தன் வேதனைகளைக் கொட்டி அவன் இதயத்தில் இடம் பெற முயல்கிறாள் “எதற்கும் காசு வேண்டுமே!’ என்ற உண்மையைத் தெரிந்து வைத்திருந்த கனகலிங்கம், தன் நிலைமைகளை உடைத்துச் சொல்லியும், யதார்த்த வாழ்க்கையை எடுத்து எடுத்துக் கூறியும் அவள் சமாதானம் அடையாததால், "நான் உன்னைக் காதலிக்காமல் கொல்வதைவிடக் காதலித்தே கொன்று விடுகிறேன்' என்னும் முடிவோடு அவளைச் சென்னைக்கு அழைத்து வருகிறான் சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் கனகலிங்கமும், அகல்யாவும் ரயிலை விட்டு இறங்கும்போது, யாரையோ வரவேற்க வந்திருந்த அவன் முதலாளி பரமசிவம் அவனைக் கண்டதும் 'வா, வா' என்றவர் உடன் வந்த அகல்யாவைக் கண்டதும் கண் சிவக்க வாய்மூடி நிற்கிறார். அடுத்த கணமே கனகலிங்கத்தின் கணக்கைத் தீர்த்து அவன் சீட்டைக் கிழித்து விடுகிறார். விவரம் புரியாமல் கனகலிங்கம் விழித்தபோது, 'உங்கள் முதலாளிதான் என் சித்தப்பா' என்ற விவரத்தைச் சொல்லி அகல்யா அவனுக்காக அனுதாபப்படுகிறாள் கனகலிங்கம் தனக்கு வேலை தேடும் முயற்சியோடு அகல்யாவைச் சேவாசனத்தில் சேர்த்து விடவும் முயல்கிறான் இந் நிலையில் அகல்யா தன் சிநேகிதி வீட்டிற்குப் போகிறாள் தம் மனத்துக்குப் பிடித்தமான வேலையைத் தேடிக் கனகலிங்கம் அலைந்து கொண்டிருந்தபோது, கார் ஒன்று அவன் மேல் மோதி அவன் உயிரைக் குடித்து விடுகிறது “என்னைக் கடவுள் கைவிட்டாலும், கனகலிங்கம் கைவிட மாட்டார்' என்னும் நம்பிக்கையோடு இருநத அகல்யா,