பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


62 விந்தன் நன்மை பயக்கவும் குறிக்கோளோடு எழுதியவர் இது காரணமாகவே அவரை பிரசார நாவலாசிரியர் பிரிவிற் சோத்து விடுகிறார் அகிலன்' 'பாலும் பாவையும் ஆசிரியர் வேண்டுமென்றே இராமயண பாத்திரங்களையும் கதா சம்பவங்களையும் குறிப்பிடுகிறார் இதனால் இதிகாசமும் நவீன கதையும் ஒன்றையொன்று ஒட்டவும் வெட்டவும் வாய்ப்பு ஏறப்டுகிறது ஆசிரியர் பழைய கருத்துக்கள் கொள்ளும் போதும், தள்ளும்போதும் நின்று நின்று நாம் கவனிக்குமாறு இசைவுப் பொருத்தங்களை உணர்த்திக் கொள்கிறார் வேறொரு நூலுக்கு கி சந்திரசேகரன் எழுதியுள்ள முகவுரையில் கூறுவது இவ்விடத்தில் பொருத்தமாகக் கூறப்படுகிறது ஆழ்ந்த மனச் சுழல்களில் நம்மைச் செருக்கும் தன்மை பெற்றவை இங்குள்ள கதைகள் சில ஒருமுறைக்கு இருமுறையாக அவற்றின் கருத்து நம்மைத் துழாவ வைப்பதற்குக் காரணம் அதுவே அபிப்பிராயத்தின் விஷேசம் சில வேளைகளில் நம் உள்ளங்களைத் தொட்டு விடுகிறது சில சமயம் உலுக்கியும் விடுகிறது (அடியும் முடியும் 1970) 'பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைப் பற்றியே பெரும்பாலும் கதை எழுதிக் கொண்டு வந்த தாங்கள், காதலைப் பற்றி ஏன் எழுத வேண்டும்?' என்று வாசகச் சகோதரி ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு, 'காதல் தோல்வியுறுவதற்குக் கூடக் காரணம் பொருளாதார நிலைதான், அதைத்தான் இந்தக் கதையில் வரும் கனகலிங்கம் அகல்யாவுக்குச் சுட்டிக் காட்டுகிறான், நமக்கும் சுட்டிக் காட்டுகிறான்' என்று விந்தன் முன்னுரையில் சொல்லியிருப்பது, ஏதோ சமாதானத்திற்காகச் சொன்னது போல் இல்லாமல் மிகுந்த பொறுப்புடனும் சமூக நோக்குடனும் சொல்லப்பட்டிருக்கிறது என்பதனையே இந் நாவல் உணர்த்துகிறது மேலும், 'பெண்குலத்தை மாசுபடுத்துவதற்காக நான் இந்தக் கதையை எழுதவில்லை; தூய்மைப்படுத்துவதற்காகவே எழுதி யிருக்கிறேன் இந்தக் கதையில் வரும் அகல்யாவிடம் எவ்வித வெறுப்பும் எனக்கு இல்லை அவள் பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவள் என்று குறிப்பிடும் போது மட்டும் எனக்கு அந்த இனத்தின் மேல் இயற்கையாக உள்ள வெறுப்பை ஓரளவு காட்டியிருக்கிறேன் - அவ்வளவுதான்' இத்தகைய அழுத்தமானக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு இந் நாவல் எழுதப்பட்டிருந்த போதிலும், இதனூடே தேசியத் தன்மை வாய்ந்தக் கருத்தொன்றையும் கதை முழுவதும் சித்திரித்துக் காட்டி நமது இலக்கிய நோக்கை வெளிப்படுத்தியுள்ளார் விந்தன்