பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நாவல்கள் 63 ஆம் 'வகுப்பு வெறியின் காரணமாகக் கற்பழிக்கப்பட்ட பெண்களை ஆண்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்' எனறு தேசத்தந்தை மகாத்மா காந்தி விடுத்த வேண்டுகோளை மதித்து, அத்தகைய அவலத்துக்கு ஆளான பெண்களைச் சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை மக்கள் முன் எடுத்துச் சொல்லவதற்கு முன்வந்த இந்திய முற்போக்கு எழுத்தாளர்களில் விந்தனே முன்னோடி என்று கருதுகிறேன். அதிலும் தமிழில் முதல் முதலாகச் சொனனவர் விந்தன்தான் என்றும் நம்புகிறேன் 'பொன்னுக்கும் பொருளுக்கும் உள்ள மதிப்பு இந்தக் காலத்தில் பெண்ணுக்கு - ஏன், அவள் கற்புக்குக் கூட இல்லை' என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டிருந்த விந்தன், ஒருவனால் கைவிடப்பட்ட - கற்பிழந்த அகல்யாவிற்காகப் பெரிய சமூகம் புரட்சி ஒன்றை நடத்திக் காட்டுகிறார், கனகலிங்கம் என்னும் கதை மாந்தனின் துணையோடு ஆசிரியர் தொடங்குகின்ற போராட்டமும் அவர் தொடுக்கின்ற கணைகளும் எதிரியைத் தாக்கி வீழ்த்துகிறதா என்றால் அதுதான் இல்லை. ஏன்? அதுதான் இந்தப் போராட்டத்தின் சிறப்பு சமூகத்தின் யதார்த்த நிலை பொதுவாகவே சமூகத்தின் யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு போராடுகிறவனைவிட, புரிந்து கொள்ளாமல் போராடுகிறவனே புத்திசாலியென்று மதிக்கப்படும் சமூகத்தில், உண்மையான போராட்டங் களுக்குக் கிடைக்கும் தோல்விகள் எவ்வளவுதான் பெரியதாக இருந்தபோதிலும் அவைகள் வெற்றியின் தொடக்கம் என்றே கொள்ள வேண்டும் ஏனெனில், நடத்தப்படுகின்ற போராட்டங்கள் வலிமையும் - வசதியமுடைய மனித எதிரிகளை நோக்கி, பெண்ணடிமைத்தனமும் பழைமைப் போக்குகளும் மலிந்த சாதியும் சமயமும் சார்ந்த சமூகத்தை எதிர்த்து, இன்னும் தெளிவாகச் சொன்னால் இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் நடக்கும் போராட்டம் என்பதே உண்மையாகும் அன்பு அலறுகிறது 957-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 'அமுத சுரபி' இதழில் 'அன்பு அலறுகிறது' என்கிற தொடர்கதையை விந்தன எழுதத் தொடங்கினார் இத் தொடரைப் படித்த எழுத்தாளர் அகிலன் "என்னுடைய சிநேகிதி' என்கிற நாவலின் கதைக் கருத்தை விந்தன் திருடிவிட்டார்' என்று 'அமுத சுரபி' நிர்வாகத்துக்கு வழக்கறிஞர் மூலம் தெரிவித்தார் அவர்களும் பதில் அளிக்கும் வகையில் விவகாரத்தைப் பிரபல வழக்கறிஞரும் கலைஞருமான காலஞ்சென்ற வி சி கோபாலரத்தினம் அவர்களிடம் கொண்டு சென்றனர் வி சி ஜி. அவர்களோ