பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நாவல்கள் to5 இவ்வாறு அகிலன் எழுதிய 'சிநேகிதி' நாவலில் சொல்லப்பட்டிருந்த கருத்தின் மேல் மிகுந்த கோபம் கொண்டிருந்த விந்தன், அந்த நாவலுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் 'அன்பு அலறுகிறது' என்கிற முழு நாவலையே எழுதத் துணிந்தார் விந்தனின் மறுப்புக் கதையைக் கண்டு சகோதர எழுத்தாளர்களும், சில பிரமுகர்களும் விந்தன் பேரில் கொதிப்பும் கோபமும் கொண்டிருந்த போதிலும் எவரும் அதை வெளிப்படுத்தாமல், சிரித்துச் சிரித்துப் பேசியே ஓர் இலக்கியவாதியின் வளர்ச்சிக்கும், வாழ்க்கைப் போராட்டங்களுக்கும் குழிபறித்துக் கொண்டிருந்தார்கள் அதுவே 'சிறந்த தமிழ்ப்பண்பு' என்றும் தயங்காமல் சொன்னார்கள் ஆனால், விந்தனோ எதற்கும் அஞ்சாமல் அவர்களின் கொள்கைகளை, போலியான தமிழ்ப் பண்பாட்டைத் தோலுரித்துக் காட்டிச் சிரித்தவர்களையெல்லாம் சிந்திக்கும்படி செய்து, மறுப்புச் சிந்தனையே மறுமலர்ச்சி இலக்கியத்திற்கு நல்ல அடையாளம் என அறிவித்து அடுத்தடுத்துப் பலரின் கருத்துகளுக்கு எதிர்ப்புகளை எழுதிக்காட்டினார் நாவல் இலக்கியத்தில் இத்தகைய மெய்யான விமர்சனப் போக்குகள், எதிர்காலத்தில் முற்போக்கு இலக்கியத்திற்கு மிகுந்த வலிவையும், வளர்ச்சியையும் உண்டாக்கும் என்று நம்பினார் நாமும் அந்த நம்பிக்கையோடு 'அன்பு அலறுகிறது. கதையின் நோக்கையும் போக்கையும் கவனிப்போம்! கதைச் சுருக்கம் "பிறர்மனை நோக்காத பேராண்மை - சான்றோர்க்கு அறனன்றோ ஆன்ற ஒழுக்கு" என்னும் குறளைக் கேட்டும் படித்தும் அறியாத பாமரர்கள் - ஏழை எளியவர்கள் பிறர்மனை நோக்காத பேராண்மை' யாளர்களாக வாழ்ந்து வந்த போதிலும், படித்தவர்கள் அதிலும் தமிழைப் படித்தவர்கள் குறளுக்குப் புதிய புதிய உரைகளைக் கண்டு பிடித்தார்கள்! எப்படி? பிறர்மனை நோக்குதலே பேராண்மை' என்னும் போக்கில் இத்தகைய புதுமைகளும் புரட்சிகளும் புற்றீசல்கள் போல் பெருகி வளர்ந்து தமிழர்களின் வாழ்க்கையைப் பண்பாட்டைச் சீர்திருத்தம் என்கிற பேரால் சீரழிந்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான், இருபது வயது நிறைந்த லலிதாவுக்கும், அறுபது வயது நிறைந்த பணக்காரருக்கும் திருமணம் நடக்கிறது; அதுவும் இரண்டாம் தாரம் என்கிற சமூக முத்திரையோடு