பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


66 விந்தன் தாய்-தந்தையை இழந்து அத்தையின் ஆதரவில் வளர்ந்த லலிதா, தனக்கு வாய்த்த இரண்டாந்தாரத் திருமணத்தை மிகவும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறாள் இவளின் திருமணத்தையும், வயோதிகக் கணவரையும் கண்டு அனுதாபப்பட்ட 'சிநேகிதி'களுக்காக இவள் ரொம்பவும் அனுதாபப் படுகிறாள். ஏனெனில், வாழ்க்கைக்கு உயிர்போன்ற அன்பே பெரிதென்றும், அத்தகைய அன்பு எங்குக் கிடைத்தாலும் சரி அதற்கு வாலிபம், வயோதிகம் என்கிற வேறுபாடு கிடையாது என்றும் மெய்யாகவும் நம்புகிறாள் ஆம், அந்த அளவிற்கு வயோதிகக் கணவர் அவள் பேரில் அன்பைப் பொழிகிறார்; அந்தரங்கச் சுத்தியோடு நடந்துகொள்கிறார். r ஆனால், முதலிரவோடு அந்த முழு நிலவுக் காட்சி முடிந்து விடுகிறது அடுத்து ஒரே இருட்டு. எதிர்பாராமல் ஏற்படுகிறது. ஒரு விபத்து! அந்த விபத்தில், 'ஆண்மை'யை இழந்து விடுகிறார் வயோதிகர்; அத்துடன் அவள் மெய்யாக நம்பிய 'அன்பு அலறுகிறது" எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் தன் கணவர் ஆண்மையை மட்டுந்தான் இழந்தார் என்று அவள் நினைத்தாள். ஆனால் அவரோ சகல பண்புகளையும் இழந்து மிச்சச் சொச்சம் ஏதும் இல்லாதவராய்ப் பேச ஆரம்பித்தார். அதற்கு முன்னுதாரணமாகத் தம் மனைவியை எவனுக்காவது தாரை வார்த்துக் கொடுத்திட வேண்டும் என்கிற முடிவுதான்! இந்தப் புரட்சிகரமான முடிவிற்கு எழுத்தாளன் ஒருவன் துணை சேர்கிறான்; அவளுக்கு அத்தான் முறையான மற்றொருவனும் அவளைச் சுற்றிச் சுற்றி வருகிறான் கடைசியில் அந்தப் பணக்கார வயோதிகள் தன் மனைவியை எழுத்தாளனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு வெளிநாட்டிற்குப் பயணமாகி விடுகிறார் கணவனின் முடிவைக் கேட்டு அவள் உள்ளம் அலறுகிறது! எழுத்தாளனும், அத்தானும் ஒவ்வொரு நிமிசமும் போட்டி போட்டுக் கொண்டு அவளை அடைவதற்கும், அந்தஸ்தை அனுபவிப்பதற்கும் தெருச்சண்டை போட்டுக் கொள்வதைக் காணப் பொறுக்க முடியாமல ஊருக்குப் புறப்பட்டுப் போகிறாள். முடிவில் பிறமனை நோக்குதலே பேராண்மை !' என்னும் வெறியோடு வாழும் மனிதர்களை வெறுத்து, அவர்கள் எதைச் செய்தாலும் அன்பு என்றும் பண்பு என்றும் மூடிமறைக்கும் சமூகத்தைத் துறந்து, தன் உயிரை முடித்துக் கொள்ளத் துணிகிறாள் அதற்கு முன் எவரும் 'அன்புப் பணி செய்யாமல் அமைதியாகயிருப்பவர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் பரிசு அளிப்பதாகவும், அதற்குத் தன்னுடைய