பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


68 விந்தன் அல்லது தூற்றவாவது வேண்டும் இரண்டு மில்லையென்றால் எழுதுவதை விட எழுதாமல் இருந்து விடலாம்" என்பது பேராசிரியர் 'கல்கி'யின் கருத்து இந்தக் கருத்தை எழுதத் தொடங்கிய நாளிலிருந்து தனது இலக்கிய கொள்கையாகக் கொண்டுள்ள விந்தன், எத்தனையோ பேருடைய போற்றதலுக்கும், தூற்றதலுக்கும் உள்ளான போதிலும், வாழ்க்கை வசதிகளைக் கருதி வழிமாறிப் போனதில்லை; உதாரணத்திற்கு இந்த நாவல் ஒன்றே போதும்! தனது சுயமான - சுதந்திரமான கருத்துகளைச் சொல்லுவதற்கு 'மனிதன்' என்னும் மாத இதழைச் சொந்தத்தில் நடத்தி அது பத்து இதழோடு மரணம் அடைந்ததற்குப் பிறகு விந்தன், இராஜாஜி எழுதிய 'பஜகோவிந்தம் என்கிற நூலுக்கு மாறாகப் பசிகோவிந்தம்' என்னும் நூலை எழுதிப் பலரின் போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் உள்ளானார். அகிலன் எழுதிய 'சிநேகிதிக்கு மாறாக 'அன்பு அலறுகிறது' என்னும் நாவலை எழுதிப் பலரின் போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் உள்ளானார். மனிதன் மாறவில்லை என்னும் தொடரை எழுதிப் பலரின் போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் உள்ளானார்! ஏனெனில், இத்தொடர் இழை நக்கி நூலாடை நெய்த வள்ளுவரின் பெயரைச் சொல்லி வளமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ப் பேராசிரியர் ஒருவரின் நிச வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்பதால்! 1961 டிசம்பர் மாதம் 'அமுதசுரபி' இதழில் 'மனிதன் மாறவில்லை' என்னும் தொடரை விந்தன் எழுதத் தொடங்கியபோது, ஒரு தமிழ்ப் பேராசிரியரின் மாணவர்களும், இரசிகர்களும் நண்பர்களும் பகைவர்களும் 'விந்தன் மிகவும் துணிச்சலுடன் தமிழ்ப் பேராசிரியரின் 'பண்புகளை அதுவும் தமிழ்ப்பண்புகளைப் பச்சையாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்!" என்று சம்மன் இல்லாமலேயே சாட்சிகளாக மாறினார்கள்; இலைமறை காயாக இருந்த விவகாரத்தை எடுத்து எடுத்துச் சொன்னார்கள்; ஒளிவு மறைவு இல்லாமல் உடைத்து உடைத்துச் சொன்னார்கள். ஆனால், இராஜாஜியின் தொண்டர்களும், அகிலனின் இரசிகர் களும், பேராசிரியரின் மாணவர்களும் மூலவர்களை முழுவதுமாக நம்பி மூலதனமாகக் கொண்டு ஆதாயம் தேட அலைந்தபோது, இராஜாஜி அவர்கள், விந்தன் எழுதிய பசி கோவிந்தம்' என்னும் சிறு நூலைத் தமது நூலகத்தில் பலரின் பார்வையில் பளிச்சென்று தெரியும் வண்ணம் வைத்துத் தன்னைக் காணவரும் இலக்கிய அன்பர்களிடம் விந்தனைப் பற்றி பேசுவாராம் அகிலனோ, வழக்குத் தொடுத்ததோடு அந்த விவகாரத்தை மறந்து விட்டார் எல்லோருக்கும் நல்லவராக - வல்லவராக, அதோடு எங்கும் எதிலும் உணர்ச்சிக்கு இடம்