பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நாவல்கள் 73 அந்த விடுமுறையில் வயோதிகர்கள் மனைவி மக்களுடன் ஊர் சுற்றுகிறார்கள்; அல்லது அவர்களோடு போராடிக் கொண்டிருக் கிறார்கள் பொதுவாக இத்தகைய விடுமுறைகள் பணம் இருப்பவர்களுக்குக் கொண்டாட்டம் இல்லாதவர்களுக்குத் திண்டாட்டம் வாலிபர்கள் கனவு கண்டால் அது அவர்களின் வருங்கால மனைவிமார்களைப் பற்றிய வண்ணமயமான கனவுகளாத் தான் இருக்கும் என்பதை எல்லோரும் அறிவார்கள் அத்தகைய வண்ண மயமான கனவைத்தான் இந்தக் கதையின் நாயகன் மோகன் காண்கிறான்; அதுவும் ஒரு விடுமுறை நாளில் பகலில் காண்கிறான் அது பலித்துவிடுகிறது கனவிலே வந்த கன்னி அழகு காட்டினால் சரோஜாதேவியாகவும், காட்டாவிட்டால் தேவிகாகவாகவும் இருந்ததில் மோகனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. மேலும் கனவிலே வந்த கன்னி தன்னுடன் பணியாற்றும் பாமாவாக இருந்ததில் பல மடங்கு மகிழ்ச்சி! மோகன் - பாமா காதல் அரசாங்கத்தின் திட்டங்களைப் போல் பொறுமையாகவே வளர்கிறது ஒரு நாள் மோகனும் பாமாவும் கடற்கரையில் அமர்ந்திருந்த போது, ஒருவன் பாமாவின் பக்கத்தில் அமர்ந்து "நானும் கொஞ்ச நேரம் இவளோடு உட்கார்ந்து கொள்கிறேன்' என்று சொல்வதைக் கேட்டு மோகன் 'போலீஸ்; போலீஸ்' என்று கத்தியவாறு ஓடுகிறான்; பாமாவைத் தனியாக விட்டுவிட்டு அத்தருணத்தில் அங்கு வந்த மோகனின் நண்பன் மணி அந்த முரடனைச் செம்மையாக உதைத்து விரட்டுகிறான் மணியின் வீரத்தைக் கண்டு வியந்த பாமா, அவனையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட மோகன், 'இவள் நம்மை மறந்து விட்டாளோ? என்னும் கலக்கத்துடன் 'இதெல்லாம் இந்த மணியின் வேலைதான்' என்று மணியின் பேரில் பழியைப் போடுகிறான் எனினும், பாமா மணியை உயர்வாகவே நினைக்கிறாள். மோகன் - பாமா காதல் பாமாவின் சகோதரி இராதாவிற்குத் தெரிந்து விடுகிறது; பேராசிரியை மீனாட்சி அம்மை மூலமாக, அதன் பொருட்டு அவர்கள் மோகனை அழைத்து வரும்படி வற்புறுத்த பாமா ஒருநாள் அவனை வீட்டுக்கு அழைத்துப் போகிறாள் அங்கே அவன் சகோதரி அருணா இருப்பதைக் கண்டு எவரிடமும் ஏதும் பேசாமல் திரும்பி விடுகிறான். இது எல்லோருக்கும் எதையேதையோ நினைக்கும்படி உண்டாக்குகிறது.