பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


76 விந்தன் இந்தக் காட்சிகளைக் கண்டு மனம் பூரித்து மணமக்களை வாழ்த்திய ஆபத்சகாயம், "உன்னுடைய மனத்தோடு இதுவரை எந்த மனமும் ஒன்றுபடவில்லையா?' என்று மணியிடம் கேட்க, 'காதலையும் கல்யாணத்தையும் வாழ்க்கையில் ஒரு பிரச்னையாக - இலட்சியமாகக் கருதவில்லை' என்றவாறு போய்க் கொண்டிருந்தான் மணி எல்லோரும் அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; குறிப்பாக பாமாவும், அருணாவும் கண் கலங்கப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் திறனாய்வு 'கலைஞன் என்பவன் தன் நாட்டைப் பற்றியும், தன்னுடைய சமுதாயத்தின் செவியாகக் கண்ணாக, நெஞ்சமாக விளங்குபவன் தான் வாழும் காலத்தின் உண்மைகளை எடுத்துக் கூறுபவன்தான் கலைஞன்” மார்க்சிம் கார்க்கியின் இத்தகைய மணிவாசகத்தில் மிகுந்த ஈடுபாடும் நேசமும் கொண்டிருந்த விந்தன், தான் வாழும் காலத்தின் உண்மைகளை அதை மூடி மறைக்க நடந்த போராட்டங்களை எப்போதும் தம் எழுத்துகளில் எடுத்துச் சொல்ல தயங்கியதில்லை என்பதற்கு இந்த நாவலும் சிறந்த சான்றாகத் திகழ்கிறது. ஒரு காலகட்டத்தில் படைப்பாளிகளுக்கும், வெகுஜனப்பத்திரிகை களுக்கும் நடந்த போராட்டத்தில் சில எழுத்தாளர்கள் பங்கு பெற அஞ்சி, ஒடி ஒளிந்தபோது, வாழ்க்கையே ஒரு போராட்டமாக அமைந்த விந்தன் எத்தகைய பாதிப்புகளைக் கண்டும் அஞ்சாமல் தம் எழுத்துப் போராட்டத்தைத் தொடர்ந்தார். "வாழ்க்கையின் பலப் பிரச்சனைகளுக்கிடையே பிறந்தும் வளர முடியாத என் நாவல்களை சர்வ வல்லமையுள்ள காசால் தான் காப்பாற்ற முடியுமா? கடவுளே உன்னால் காப்பாற்ற முடியாதா?’ என்று விந்தன் கவலைப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் எழுதப்பட்ட இந்நாவலில், சர்வ வல்லமை உள்ள காசால்தான் எதையும் சாதிக்கவும் மூடி மறைக்கவும் முடியும் என்பதை மிகவும் ஆதாரபூர்வமாகச் சுட்டிக் காட்டுகிறார். தமது கொள்கைகளையும், இலட்சியங்களையும் மூலையில் மூட்டைகட்டி வைத்துவிட்டு, எழுதுகிற பத்திரிகைக்கு ஏற்றவாறு எழுதும் மரபை என்றுமே பெற்றிறாத விந்தன், களம் எதுவாயினும் கருத்துக்கே முதலிடம் என்கிற நோக்கில் தம் கருத்துகளை வெளிப் படுத்தியுள்ளார். பொதுவாகவே விந்தன் பழைய மரபுகளை மீறுகின்றவர், புதிய மரபுகளையும், மனிதனையும் விரும்புகின்றவர் அதனாலேயே "போலீஸ்காரன் திருடமாட்டான் நமது நண்பர், பேராசிரியர் கொலை