பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


84 விந்தன் “என் கவலை என்ன தெரியுமா? பால் மறந்த மாட்டை வாங்க அடிமாட்டுக்காரன் என்று ஒருவன் இருப்பது போல, வயசாகிப் போன உங்களை வாங்க அப்படி ஒருவன் இல்லையே என்பது தான் ஒ, மனிதா எப்படி இந்தப் பிள்ளை மனம்? சுதந்திரம் உன்னுடைய 'பிறப்புரிமை'யாக இருக்கலாம் ஆனால் சொத்துரிமை உன்னுடைய பிறப்புரிமை அல்ல; அது இயற்கையின் பிறப்புரிமை அந்த உரிமையை நீ இயற்கையிடமிருந்து அபகரித்தாலும் - அதன் பலனை நீ இப்போது நன்றாக அனுபவிக்கிறாய்" "சொத்துரிமை வேண்டுமானால் நிம்மதியை விடு; நிம்மதி வேண்டுமானால் சொத்துரிமையை விடு' (சிட்டுக்குருவி கேட்கிறது) சலவைத்தொழிலை மேற்கொண்டு 'ஜாதிக்கு ஒரு தொழில் இல்லை' என்பதை நிரூபிக்க ஒரு சர்மாவோ சாஸ்திரியோ எங்கே துணியப் போகிறார்?' என்னை ஆகாயத் தோட்டி என்று இடித்துரைக்கும் மனிதனே உங்களிடையே உங்களில் ஒருவனாக நடமாடும் தோட்டியை நீ நகர சுத்தித் தொழிலாளி என்று சொல்லி விட்டால் சமூகத்தில் அவனுக்குள்ள இழிவு அவனை விட்டு போய் விடுமா? ஒரு நாளும் போகாது அதனால்தான் வைசியரான மகாத்மா தாமே தோட்டி வேலை செய்து கூட்டினார் அவரையே டாக்டர் அம்பேத்கர் கேட்டார் 'அரிஜனங்கள் கடவுளின் குழந்தை என்றால் மற்றவர்கள் யாருடைய குழந்தைகள். இதிலிருந்து என்ன தெரிகிறது? புறப்புரட்சி மூலம் யாரும் எதையும் சாதிக்க முடியாது அகப் புரட்சி மூலமே சாதிக்க முடியும் என்று தெரியவில்லை?" அந்த அகப்புரட்சியை நீ எப்போது செய்யப் போகிறாய்? (காகம் கேட்கிறது) மனிதனோடு இரண்டறக் கலந்து வாழும் காகம், குருவி, கிளி போன்றவை அவனுடைய பலங்களை - பலவீனங்களை நன்கு அறிந்தவை அவன் பேசும் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் மிகுந்த எடுபாடுவுடையவை. அதனால்தான் காகம் அம்பேத்காருக்கும் மகாத்மாவுக்கும் நடந்த அரிஜன் பிரச்சனை பற்றி பேசுகிறது சொத்துரிமையைப் பற்றி சிட்டுக்குருவி பேசுகிறது இப்படி 'வாய் இல்லாத பூச்சிகள் பேசும் சமூகப் பிரச்சனைகளைக் கேட்டு வாய்' உள்ள மனிதன் வாயை அகலத்திறந்து பார்க்கிறான் அதற்குத் துணையாகவும் தூண்டு கோலாகவும் உள்ளார் விந்தன்.