பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


என்னுரை பாரதியார் வ ரா கல்கி ஆகியோரின் வழியைப் பின்பற்றியும், அதற்கு மேலே ஏழை எளிய உழைப்பாளி மக்களைப் பற்றி சிந்தித்தும, 'இருப்பவனைப் பற்றி எழுதி அவன் பணத்துக்கு உண்மை இரையாவதை விட இல்லாதவனைப் பற்றி எழுதி அவன் அன்புக்கு உண்மை இரையாவதே மேல்' என்னும் கொள்கையுடன் நாற்பது ஆண்டுகள் எழுதி எழுதியே பலரின் தூற்றுதலுக்கும், சிலரின் போற்றுதலுக்கும் ஆளான விந்தனின் இலக்கியப்பணி குறித்து இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் நூல் எழுதுமாறு பணித்த சாகித்ய அகாதெமி நிர்வாகிகளுக்கும், என் எழுத்து பணிக்கு உதவியாக இருந்து வரும் எனது மருமகள் மகி' எனும் திருமதி உமாரமேசுக்கும் என் மனமார்ந்த வணக்கமும் பாராட்டும் தோழமையுள்ள மு பரமசிவம்