பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6 கட்டுரைகள் வித்தன் கதைகள் எழுதிய அளவு கட்டுரைகள் எழுதியதில்லை 1947இல் தொழிலாளர் பிரச்சனையை முன் வைத்து வேலை நிறுத்தம் ஏன்?' என்னும் சிறு நூலை ஒரே இரவில் எழுதி வெளியிட்டார் அந்த நூல் இன்னும் தொழிலாளர்களின் பிரச்சனைக்கு ஏற்றதாகவும் போராடுவதற்குத் துண்டுதலாகவும் இருப்பதால் அந்நூலை ஆசிரியரின் அனுமதியின்றியே அச்சிட்டு தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்கள் தொழிற்சங்க தலைவர்கள். சென்னை மாநகராட்சியை தி மு க கைப்பற்றிய காலத்தில் சுதேசமித்திரன் ஏட்டில் சேரிகள் நிறைந்த சென்னை மாநகரம்' என்கிற தலைப்பில் தொடர் கட்டுரையை எழுதினார் அச்சமயத்தில் விந்தன் சேரியில் வாழும் ஏழை எளியவர்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு பத்திரிகையில் எழுதினார் அதன் மூலமே சென்னையில் எத்தனை சேரிகள் உள்ளன என்பதனையும் அவரகளின் அவலநிலைமையும் அறிந்தார் விந்தன் (அந்தக் கட்டுரைகள் இன்னும் நூலாக வெளிவரவில்லை) விந்தன் அவ்வப்போது பத்திரிகையில் எழுதிய கட்டுரைகள், அவரின் நூலுக்கு எழுதிய முன்னுரைகள் அனைத்தையும் தொகுத்துத் தந்தேன்.'விந்தன் கட்டுரைகள்' என்ற தலைப்பில் 1998ல் கிறிஸ்துவ இலக்கிய சங்கம் வெளியிட்டார்கள் . விந்தன் கட்டுரைகள் சிலவற்றை பார்க்கலாம் 'உலகத்தில் மனிதன் இறப்பதற்கு எத்தனையோ வழிகளை கையாள்கிறான் விஷம் குடிப்பது. வெந்தணலில் வீழ்வது, குளத்தில் மூழ்குவது கோபுரத்தின் உச்சியிலிருந்து குதிப்பது, தூக்குப் போட்டுக்கெள்வது. நாக்கைப் பிடுங்கிக் கொள்வது, கத்தியின் துணையை நாடுவது, காரிலோ ரயிலிலோ மாட்டிக் கொள்வது இப்படி எத்தனையோ வழிகள். புதுமைப் பித்தன் இறப்பதற்கு இந்த வழிகளையெல்லாம் கையாளவில்லை. அவர் எழுதினார் ஆம், வாழ்வதற்காக எழுதவில்லை, சாவதற்காக எழுதினார் எனக்குத் தெரிந்தவரை அவர் செத்து போவதற்கு காரணம் இதுதான்!